யானைகள் மற்றும் வன விலங்குகள் ரயில்களில் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சென்சார் அமைப்புகளை நிறுவுதல், சரக்கு ரயில்களை பகலில இயக்குதல் மற்றும் வேக எல்லைகளை விதித்தல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி ரயில்களில் யானைகள் மற்றும் வன விலங்குகள் விபத்துக்குள்ளாவதைத் தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க படபெந்தி, பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.