2025 இடைப்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட பாசிப்பயறை கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடு

2025 இடைப்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட பாசிப்பயறை கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடு
  • :
 
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக்கு இணங்க தேசிய உணவு ஊக்குவிப்பு சபையினால் 2025 இடைப்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட பாசிப்பயறை கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி தீர்மானித்தது.

 பாசிப்பயறு உற்பத்தியின் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் 2025 சிறு மற்றும் இடைப் போகத்தில் 16,500 ஹெக்டயர் அளவிலான நிலத்தில் பாசிப்பயறு செய்கை பண்ணப்பட்டுள்ளது.

அதன் ஊடாக பாசிப்பயறு 14,600 மெற்றிக் தொன் அளவிலான அறுபடை எதிர்பார்க்கப்படுவதுடன் அந்த அறுவடையில் 12,000மெற்றிக் தொன்னை உள்நாட்டு சந்தைக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாசிப்பயறு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இடை நடுவில் ஒரு கிலோ பாசிப்பயறு 450 ரூபாயையும் விடக் குறைவான அறுவடை செய்யப்பட்ட பாசிப்பயறு கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே விவசாயிகளுக்கு சாதாரண விலையைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles