கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதி அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதி அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
  • :

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதி அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.ம. பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் நேற்று (25.10.2025) காலை 10.30 மணிக்கு அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளின் உடைய முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வேலணை,ஊர்காவற்துறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு கிடைக்கப்பெற்ற விசேட நிதியானது தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாலும் , கடல் கடந்த போக்குவரத்து மற்றும் இனிவரப்போகும் பருவகால மழை காரணமாக வேலைத்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வேலணை,ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியுமெனவும் ஆனால் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வேலைத்திட்டங்களை மேற்க்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதாகவும் அதனடிப்படையில் நெடுந்தீவில் முழுமையாக 3 வீதிகளின் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்மென தெரிவிக்கப்பட்டதோடு நெடுந்தீவில் உள்ளே வேறு வீதிகளை புனரைமைப்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Articles