போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்வு

போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்வு
  • :

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்தும் போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்று (26.06.2026) பி. ப 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய நாள் போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அனைவரும் அக்கறையோடு கடமையாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் இது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிரான" முழு நாடும் ஒன்றாக" (ரட்டம எகட்ட)தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் இது தொடர்பான செயற்பாடுகள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் போதைப் பொருள் சம்பந்தமான கட்டுப்பாட்டு நிலைமைகள் ஒவ்வொரு சீர்திருத்த கட்டுப்பாட்டு நிலைமையிலும் முன்னெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயம் எனவும், இருப்பினும் ஆங்காங்கே போதை பொருட்களினுடைய பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலைப்பாடுகளும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கின்ற நிலைமையும் காணப்படுவதாக உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான முன்னேற்றகரமான செயற்பாடுகள் வரவேற்கத்தக்க விடயமாக உள்ளதாகவும் அதனுடைய பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாக இருந்தால் பிரதானமாக போதைப்பொருள் நாட்டுக்குள் வருகின்ற வழிவகைகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும், அப்பொறுப்புணர்ந்தும் தேசிய ரீதியிலே நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மாவட்ட ரீதியில் குற்றத்தடுப்பு போதை தடுப்பு,விசேட நடவடிக்கை குழு ஆகியவற்றின் மூலம் போதைப் பொருளை கட்டுப்படுத்தக்கூடிய நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளிலும், போதை தடுப்பு மறுவாழ்வு நிலையங்களில் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி போதைப் பொருளுக்கு எதிரான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் நன்றிகளை தெரிவித்தார்.

பொதுமக்களின் மருந்துகளின் தவறான பாவனை தொடர்பாக ஆராயப்பட்டு போதிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டிய தேவைப்பாடு தொடர்பாகவும், மருந்தகங்களில் அபாயகரமான மருந்துகளை வழங்குவது தொடர்பாக போதிய அறிவுறுத்தல்களை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அவர்கள் வழங்குவார் எனவும் அது தொடர்பாக மருந்தகங்கள் தங்களுக்குரிய செயற்பாடுகளை சட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும் தவறுகள் ஏற்படும் போது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவும், மருந்து சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் விநியோகிக்கப்படுவதாகவும் சாதாரணமான விடயமாக அமைந்துள்ளதாகவும் அதனைமாற்றி அமைக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளதாகவும் அபாயமான மருந்துகளை வழங்கியதன் பின்னர் அதனை சரியான இருப்பு பதிவேட்டில் பதிவை தொடர்பாகவும் அறிவுறுத்தல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று காலாவதியான பொருட்கள் தொடர்பாக கவனம் எடுக்க வேண்டும் எனவும் காலாவதியான திகதி தொடர்பாக சரியான பொறிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலே சரியான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைப்புக்களும் வழங்க வேண்டும் எனவும் அசாதாரண சூழ்நிலையிலும் ஒவ்வொருவரும் தங்களுடைய கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளதாகவும் மருந்தகங்கள் தட்டுப்பாடான காலத்திலும் மிக கடினமான பணியை ஆற்றிஉள்ளதாகவும் போதைப் பொருள் மாத்திரைகள் தொடர்பாக சரியான கவனம் எடுத்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

உலகளாவிய போதை பொருள் பிரச்சனை, தொடரும் சிக்கல்கள், புதிய சவால்கள், புதிய தீர்வுகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மருந்தக கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பாக மருந்த உரிமையாளர்கள், மருந்தாளர்களுக்கு அறிவுறுத்தல்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் அவர்கள் வழங்கியதுடன், விசவகை மற்றும் அபாயகரமான மருந்துகள் காட்சிப்படுத்தல் மேற்கொண்டு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் திருமதி. சியாமினி அவர்களாலும் விளக்கமளிக்கப்பட்டது.

இறுதியாக மருந்தக உரிமையாளர்கள், மருந்தாளர்களுக்கு போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு stickers வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க. சிவகரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், உளநல மருத்துவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், மதுவரி திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இணைப்பாளர், உணவு மருந்து பரிசோதகர்கள், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்கள், மருந்தக உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளர்கள், மாவட்ட இணைப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், தடுப்பு சிகிச்சை புனர்வாழ்வு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles