பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் என்பன பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன
பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய (14வது பிரிவு) விசேட பெரும்பான்மையுடனும், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றியும், பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றியும் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தச் சட்டமூலங்களின் ஊடாக பணம் தூய்தாக்கல்,பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் நிதிக்குற்றங்களைத் தடுப்பதற்கான தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை சர்வதேசத் தரங்களுக்கு இணங்க மேலும் வலுப்படுத்தவும், நிதிக் கட்டமைப்பின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நிதிப் பரிவர்த்தனைகள் மீதான ஒழுங்குமுறைச் செயல்முறையை மிகவும் திறமையானதாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது


