2024.12.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2024.12.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
  • :

2024.12.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

01. உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவை நிறுவுதல்

தேசிய உணவு மற்றும போசாக்குப் பாதுகாப்பை உருவாக்குதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு வழங்குதல் அரசின் முக்கிய பணியாவதுடன், ஒவ்வொரு பிரஜையின் குறைந்தபட்ச உணவுத் தேவை போதியளவிலும் தரப்பண்புடன் கூடியதுமான மலிவாகப் பெற்றுக் கொடுப்பதே அரசின் பிரதான நோக்கமாகும். புதிய அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அதற்கான பல நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் உள்நாட்டில் உற்பத்தி செய்தல், குறைந்தபட்சம் 03 மாதங்களுக்கு போதியளவு அத்தியாவசிய உணவு சுயபாதுகாப்புத் தொகையைப் பேணுதல், நாட்டில் காணப்படும் உணவு இருப்புத் தொடர்பான தரவுத் தொகுதியைப் பேணுதல் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஏதுவான உற்பத்திகள், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் போன்ற செயன்முறைகளுக்குத் தனியார் துறையையும் பங்கெடுக்கச் செய்து பயனுள்ள வேலைத்திட்டம் அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த பணிகளுக்கு அதிக கவனத்தைச் செலுத்துதல் உள்ளிட்ட நிறுவன ஒருங்கிணைப்பை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக் காப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி செயலகத்தின் மூலம் ஒருங்கிணைப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக தொடர்புபடும் அனைத்து நிறுவனங்களின் பங்கேற்புடன், தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலான விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வின் மூலம் கொள்கை வழிகாட்டலுக்காக விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வணிக, வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்களின் இணைத் தலைமைத்துவத்திலும், மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களின் அங்கத்துவத்துடன் கூடிய 'உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு' ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. வலுசக்திக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஒருங்கிணைக்கின்ற கருத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் நிதியைப் பெற்றுக் கொள்ளல்

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதி வழங்கப்படும் மின்சக்திக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான கருத்திட்டத்தின் கீழ் விநியோக வலையமைப்பை பலப்படுத்தல் மற்றும் நவீனமயப்படுத்துவற்காக அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதற்காக 2024.09.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, திறைசேரி பிணையின் அடிப்படையில் வேறு வேறான 02 கடன் ஒப்பந்தங்களின் கீழ் மின்சார சபை மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார் (தனியார்) கம்பனிக்கு முறையாக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுமாக 200 மில்லியன் கடன் தொகையை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான பிணை ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கையொப்பமிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வரையறுக்கப்பட்டசீனோர் மன்றத்திற்குரிய காரைநகர் படகு தயாரிப்பு நிலையத்தின் மீள்கட்டமைப்பு

வரையறுக்கப்பட்ட சீனோர் மன்றத்திற்குரிய காரைநகர் படகு தயாரிப்பு நிலையத்தின் மீள்கட்டமைப்புக்காக நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்தல், தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் பெறுகை செய்தல் போன்றவற்றுக்காக நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2024.10.21 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை கையொப்பமிடப்படாதிருப்பதுடன், மீன்பிடி, நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், உத்தேச நிதி வழங்கல் காரைநகர் படகு தயாரிப்பு நிலையத்தின் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு புதிய அமைச்சரவை கொள்கை ரீதியான தீர்மானத்தை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

04. பொருளாதார நெருக்கடியால் மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைத்து மீன்பிடித் துறையை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் - 2024

பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைத்து மீன்பிடித் துறையை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில் 2024.10.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 06 மாதகாலத்திற்கு எரிபொருளாக டீசலைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் படகு உரிமையாளர்களுக்கு ஒரு லீற்றருக்கு 25ஃ-ரூபாவாகவும், மற்றும் எரிபொருளாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்ற கடற்றொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 15 லீற்றர் மண்ணெண்ணெய் வீதம் மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் 25 நாட்களுக்கு மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25ஃ-ரூபாவாகவும் 'மீன்பிடித்துறையை இயல்புநிலைக்குக் கொண்டு வரும் கொடுப்பனவாகப்' பெற்றுக் கொடுப்பதற்கு 2024.08.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, எரிபொருளாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்ற சிறிய படகுகளுக்குரிய இச்சலுகையை வழங்குவதற்கு மிகவும் வசதிப்படுத்தும் நோக்கில் மீன்பிடி மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இயங்குநிலையிலுள்ள சிறிய மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு மாதாந்தம் 9,375ஃ-ரூபா கொடுப்பனவு 'மீன்பிடித் துறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான கொடுப்பனவாக' 2024.11.01 ஆம் திகதி தொடக்கம் 05 மாத காலத்திற்கு வழங்குவதற்கும், டீசல் மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற சலுகைகளை முற்கூட்டியவாறே வழங்குவதற்கும் மீன்பிடி, நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. சதுப்பு நிலங்கள் தொடர்பான சர்வதேச றம்சார் சமவாயத்தின் பங்காளர்களுக்கான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிப்பதற்கு இருக்கின்ற முன்மொழிவுகள்

சதுப்பு நிலங்கள் தொடர்பான சர்வதேச சமவாயம் எனப்படும் றம்சார் சமவாயத்தின் 15 ஆவது பங்காளர்களுக்கான மாநாடு 2025 யூலை மாதம் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தில் சமர்ப்பிப்பதற்கு இலங்கையானது 'சதுப்பு நிலங்களின் இயற்கை உரித்து' தொடர்பான முன்மொழிவு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவுகள் மூலம் உறுப்பு நாடுகள் தமது நாடுகளில் காணப்படுகின்ற சதுப்பு நிலங்களின் இயற்கைக்கான உரித்தை அடையாளங் காண்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, குறித்த முன்மொழிவானது றம்சார் சமவாயத்தின் 15 ஆவது பங்காளர்களுக்கான மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. ஹொரன ஏற்றுமதி செயன்முறை வலயத்தின் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரக் கூடத்தை மேம்படுத்தல்

இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியைப் பயன்படுத்தி ஹொரன ஏற்றுமதி செயன்முறை வலயத்தின் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரக் கூடத்தின் கொள்ளவை அதிகரிப்பதற்காக 2023.06.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தேசிய போட்டி பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன் 11 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில் ஏற்றுமதி செயன்முறை வலயத்தின் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரக் கூடத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் Luminex PLC இற்கு வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதியாக அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கை புகையிரத திணைக்களத்திற்கான யுடுஊழு டீசல் என்ஜின்கள் 22 இனை இந்திய அரசின் நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளல்

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சிறியளவில் பயன்படுத்துகின்ற ஆ10 புகையிரத என்ஜின் மாதிரியின் மேம்படுத்தப்பட்ட 20 என்ஜின்கள் மற்றும் குறித்த என்ஜின்களுக்கான பராமரிப்புக்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மேலதிக 02 என்ஜின்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய புகையிரத சேவை விருப்பம் தெரிவித்துள்ளது. குறித்தஎன்ஜின்களின் பராமரிப்பு சேவைகளை ஐந்து வருடகாலத்திற்கு வழங்குவதற்காக கோரப்படாத முன்மொழிவாக இந்தியாவின் பொறியியல் ஆலோசனைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் கம்பனியான சுஐவுநுளு கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவை மதிப்பீடு செய்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக்குழு கருத்திட்டக் குழுவை நியமிப்பதற்காக 2024.06.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நன்கொடையாக வழங்கப்படுகின்ற குறித்த புகையிரத என்ஜின்களைப் பராமரிப்பதற்கான இயலுமை இலங்கை புகையிரத திணைக்களத்திடம் காணப்படுவதுடன் திணைக்களத்தின் பணியாளர்கள் குழாமினால் அப்பணிகளை மேற்கொள்வது பொருத்தமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலாவதாக குறித்த நன்கொடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 22 புகையிர என்ஜின்களை நன்கொடையாக இலங்கை அரசு சார்பாகப் பெற்றுக் கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல்

தற்போது ஸ்மார்ட் அட்டை சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கடந்துள்ளதுடன், குறித்த நிறுவனங்களுக்கிடையேயான தரவுப் பரிமாற்ற வசதிகளை வழங்கி புதிய தொழிநுட்பத்திற்கமைய உலகில் பல நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது சிறந்ததென அரசு கண்டறிந்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை துரிதமாக அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதுவரை சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்குத் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற முறைமையைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

09. பூகொட நீதிமன்றக் கட்டிடத்தொகுதி நிர்மாணக் கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்தல் மற்றும் விலை விலகல்களுக்கான கொடுப்பனவுகளை செய்தல்

பூகொட நீதிமன்றக் கட்டிடத்தொகுதி நிர்மாணக் கருத்திட்டத்தின் கீழ் கட்டுமானத்திற்கான நிர்மாண அபிவிருத்தி அதிகாரசபை ( CIDA ) விலை விலகல்களுக்கான சூத்திரங்களைப் பயன்படுத்தி கணிப்பீடு செய்து உண்மை விலை விலகல்களை முன்னய நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக நிரந்தரப் பெறுகைக் குழுவின் மீளாய்வின் பின்னர், குறித்த குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் செலுத்துவதற்காக 2023.11.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்திற்கான ஆலோசனைச் சேவைகள் மற்றும் நிர்மாணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிறுவனமான பொறியியல் கூட்டுத்தாபனத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை விலகல்கள் தொடர்பான அறிக்கையை குறித்த அமைச்சின் நிரந்தரப் பெறுகைக் குழுவால் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. பூகொட நீதிமன்றக் கட்டிடத்தொகுதி நிர்மாணக் கருத்திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீடு 681.2 மில்லியன் ரூபாய்களாகத் திருத்தப்பட்டு குறித்த விலை விலகல்களைச் செலுத்துவதற்கும், கருத்திட்டத்தின் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கும், நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம்( Proceeds of Crime )

சட்ட வரைஞரால் வரைபு செய்யப்பட்டகுற்றச் செயல்களின் வரும்படிகள் தொடர்பான சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2024.08.12 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆயினும்,மேற்குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் சர்வதேச நாணய நிதியத்தால் பல அவதானிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த சட்டமூலம் தொடர்பான அடிப்படை வரைபை தயாரிப்பதற்காக முன்னய காலத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் உயர் நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு சர்வதேச நாணய நிதியத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அவதானிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அக்குழுவால் குற்றச் செயல்களின் வரும்படிகள் தொடர்பான சட்டமூலத்தில்; மேலும் சில ஏற்பாடுகளை உள்ளடக்கி, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை திருத்தம் செய்ய வேணடுமென விதந்துரை செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட விதந்துரைகளின் அடிப்படையில் குற்றச் செயல்களின் வரும்படிகள் தொடர்பான சட்டமூலத்தைத் தொடர்ந்தும் திருத்தம் செய்யுமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும்தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

11. நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திணைக்களங்களில் உயர் முகாமைத்துவத்துக்கான அதிகாரிகளை நியமித்தல்.

நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கமைய கீழ் குறிப்பிடப்படும் நியமனங்கள் மற்றும் இணைப்பு செய்தல்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

  • தற்போது வெற்றிடம் நிலவும் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு கட்டுப்பாட்டாளர் நாயகம் அலுவலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி திரு. எம்.கே.பிரதீப் குமார அவர்களை நியமித்தல்.
  • தற்போது வெற்றிடம் நிலவும் அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு குறித்த திணைக்களத்தில்பணிப்பாளராக சேவையாற்றும் இலங்கை திட்டமிடல் சேவையின் 1 ஆம் தர அலுவலர் திரு. பி.எம்.கே.ஹெட்டியாராச்சி அவர்களை முழுநேர பதில் கடமைக்காக நியமித்தல்.
  • தற்போது முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி திருமதி. எஸ்.எச்.டி.களுத்தந்திரி அவர்களை வேறு பொருத்தமான பதவிக்கு நியமிக்கும் வகையில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு இணைப்பு செய்வதற்கும், அதற்கமைய வெற்றிடமாகும் முகாமைத்துவ சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவிக்கு வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவியில் சேவையாற்றும் இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அலுவலர் திரு. விமல் எஸ்.கே லியனகம அவர்களை நியமித்தல்.
  • தற்போது மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் பதில் கடமையாற்றும் உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அலுவலர் திரு. யு.டி.என்.ஜயவீர அவர்களை மீண்டும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு இணைப்பு செய்வதற்கும், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேட்;ட ஆணையாளராக சேவையாற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் விசேட தர அலுவலர் திரு. யு.எல்.உதயகுமார பெரேரா அவர்களை மதுவரி ஆணையாளர் நாயகம் பதவியில் நிமித்தல்.

12. பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பங்களா வீடுகள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை பாவிப்பதற்காக பொருத்தமான முறைமையை அறிமுகம் செய்தல்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் 50 அரச சுற்றுலா மாளிகை மனைகள் கொழும்பு 07 மற்றும் கொழும்பு 05 ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு மேற்குறித்த மாளிகை மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் கொழும்பு, கண்டி, நுவரெலிய, மஹியங்கனை, அனுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டிய மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள் தவிர ஏனைய ஜனாதிபதி மாளிகைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு மேலதிகமாக பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ விடுதிகளாகப் பயன்படுத்தப்பட்ட கொழும்பு 02 இல் அமைந்துள்ள விசும்பாய தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிர்வாக அதிகாரத்தின் கீழுள்ளது. அத்துடன் பிரதமர் அலவலகத்தின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் நுவரெலியா பிரதமருக்கான உத்தியோகபூர்வ விடுதி உள்ளது. மேற்குறித்த அரச சொத்துக்களின் பராமரிப்புக்காக பெருமளவு நிதி செலவிடப்படுகின்ற போதிலும், குறித்த சொத்துக்கள் குறைபயன்பாட்டில் காணப்படுகின்றன. எனவே மேற்குறித்த வளாகங்கள் மற்றும் வீடுகளை பொருளாதார ரீதியில் உற்பத்தித்திறனாக பயன்படுத்தக்கூடிய வகையில் பொருத்தமான முறைமையை முன்மொழிவதற்கான அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

13. பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்துக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெறுதல்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்தப்படும் நீடித்த நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்துக்கு இணையாக, இலங்கையின் நீடிக்கப்பட்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரலுக்கு நிதியளிப்பதற்காக இலங்கை அரசால் சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு குறித்த நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தாலும் குறித்த கடனைப் பெறுவதற்கும், இலங்கையில் அமுல்படுத்தப்படும் குறித்த நிதியத்தின் வேலைத்திட்ட வரைகூறுகளுக்கமைய காணப்படுகின்றதெனவும் உறுதிப்படுத்தப்;பட்டுள்ளது. அதற்கமைய, மேற்குறித்த கடன் தொகையைப் பெறுவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. வங்கிகளால் பராட்டே சட்டம் அமுல்படுத்தப்படுதலை கைவிடும் காலத்தை நீடித்தல்

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இலங்கை முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடிகள், சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சி பிரிவுக்கு கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் வங்கிகளிலிருந்து பெற்ற கடன்களை தீர்க்கும் போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக தெரியவருகிறது. அந்த நிலையில் கடனை செலுத்த முடியாமை காரணமாக கணிசமானளவு வர்த்தகர்களின் ஆதனங்கள் வங்கிகளால் உரித்து பெறப்பட்டு ஏலவிற்பனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதன் காரணமாக 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் திருத்தம் செய்து அதன்மூலம் ஆதனங்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்தல் 2024.12.15 திகதி வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பராட்டே சட்ட கைவிடுதலை தொடர்ந்தும் நீடிக்குமாறு சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சி பிரிவுடன் தொடர்புடைய சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஆதனங்களை ஏலவிற்பனை செய்வதற்கு இடமளிப்பதற்கு அவ்வாறு கடன்களை மீள செலுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்வதன் மூலம் இருதரப்புக்கும் நியாயமான தீர்வு கிடைப்பதற்குத் தேவையான சூழமைவை உருவாக்குதல் மிகவும் பொருத்தமானது என அரசால் அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2025.03.31 திகதி வரை பராட்டே சட்ட அமுலாக்க கைவிடுதலை நீடிப்பதற்கும், இலங்கை மத்திய வங்கியால் அரச மற்றும் தனியார் வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் வினைத்திறனான பங்களிப்பின் மூலம் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பன்முக பொறிமுறையை உருவாக்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

15. இரட்டை வரி விதித்தலை தவிர்த்தல் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் வரி செலுத்துதலை தடுப்பதற்காக இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை எண்ணக்கருப் பத்திரம்

வருமானத்தின் அடிப்படையிலான வரி தொடர்பில் இரட்டை வரி விதித்தலை தவிர்த்தல் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் வரி செலுத்துதலை தடுப்பதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுக்கிடையிலான உடன்படிக்கைக்கு 2013 ஆண்டில் எட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா Inclusive Framework of the Base Erosion and Profit Shifting (BEPS) Project இன் உறுப்பினர் என்பதனால், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான 20 அமைப்புகள் அணியின் (Group of 20 Organization for Economic Cooperation and Development) செயற்பாட்டு திட்டத்தின் ஆகக்குறைந்த தராதரங்களை அமுல்படுத்துவதற்கான கடப்பாடு நிலவுகிறது. அதற்கமைய, 2013 ஆண்டில் கையொப்பமிடப்பட்டுள்ள இரட்டை வரி விதித்தலை தவிர்த்தல் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் வரி செலுத்துதலை தடுப்பதற்கான உடன்படிக்கையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான திருத்தங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள திருத்த புரட்டக்கோலுக்கு (விருப்புரிமை ஆவணம்) வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உடன்பாடு மற்றும் சட்ட மா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, திருத்தம் செய்யப்பட்ட புரட்டக்கோலில் கையொப்பமிடுவதற்கும், 2017 ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 75 (1) பிரிவுக்கு அமைய கையொப்பமிடப்பட்ட புரட்டக்கோலை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

16. 55,000 மெட்ரிக் தொன் மியூரியேற் ஒப் பொட்டாஸ் உரம் உலக உணவுத் திட்டத்தின் கீழ் கொடையாக இலங்கைக்கு வழங்கப்படுதல்.

55,000 மெட்ரிக் தொன் மியூரியேற் ஒப் பொட்டாஸ் உரத்தை உலக உணவுத் திட்டத்தின் கீழ் கொடையாக இலங்கைக்கு பெறுவதற்கு 2024.05.06 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விடயத்துடன் தொடர்புடைய இருதரப்பு உடன்படிக்கை உலக உணவுத் திட்டம், Uralchem – Uralkali Group கம்பனி மற்றும் இலங்கை அரசின் சார்பில் ஸ்டேட் பெர்டிலைசர் கம்பனி லிமிட்டட் ஆகியவற்றால் 2024.09.20 திகதி கையெழுத்திடப்பட்டுள்ளது. மேற்குறித்த உரத்தை ஏற்றிய கப்பல் 2024.12.10 திகதி நாட்டுக்கு வரவுள்ளது. உரத்தை இலங்கையிடம் ஒப்படைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வை 2024.12.12 திகதி கொழும்பு துறைமுகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த தகவல்களை கருத்திலெடுத்து, குறித்த உரத்தின் 50% உரத்தை நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் 50% உரத்தை தென்னைப் பயிர்ச்செய்கைக்கும் பாவிப்பதற்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Related Articles

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]