தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களுக்கான காலநிலை முன்னறிவிப்பு

தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களுக்கான காலநிலை முன்னறிவிப்பு
  • :

 

மழை நிலை:

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும். 

காற்று:

தென் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.

 

புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரை மற்றும் ஹம்பாந்தோட்டை யில் இருந்து பொத்துவில் வரை கடற்கரைக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு (35-45) அளவில் காணப்படுவதுடன் அவ்வப்போது மணிக்கு (60-70) கிலோ மீட்டர் வரை அதிகரிக்கலாம். 

 

தீவைச் சுற்றிலும் உள்ள சில கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் (30-40) மணித்தியாலத்திற்கு கிலோ மீட்டர் காணப்படும். 

 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை மற்றும் முல்லை தீவில் இருந்து திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாளத்திற்கு (50-55) கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம்.

 

கடலின் தன்மை:  

 

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன் துறை ஊடாக முல்லைத்தீவு வரை மற்றும் ஹம்மாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடலை அண்டிய பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படலாம். இக்கடல் பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை பயணிக்காத இருக்குமாறு கடல் மற்றும் மீன்பிடி சமூகத்திற்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடற் பிரதேசம் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். 

 

மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் கடல் அலை (2.0 – 2.5) மீட்டர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகிறது. (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).

 

இது தொடர்பாக அவதானம் செலுத்துமாறு மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்திடம் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களில் வானிலை முன்னறிவிப்பு. 

 

2025 ஜூன் மாதம் 15 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

Related Articles