இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
  • :
 
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டரளவிலான கடும் மழை பெய்யலாம். 
 
வட மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் சிறிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
 
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
 
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணத்திலும். மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.
 
கடும் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
 
2025 ஜூன் மாதம் 15 ஆம்  திகதி வானிலை முன்னறிவிப்பு.
 
 
2025 ஜூன் மாதம் 15 ஆம் காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது 
 
 

Related Articles