2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
  • :

2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2024.11.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்;டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. பணக் கொள்கைக் கட்டுக்கோப்பு உடன்படிக்கை (Monetary Policy Framework) தொடர்பான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான இலக்குகள் முதன்மைப் பணவீக்கம் (Headline Inflation) பணச்சுருக்கம் தொடர்பான அறிக்கையைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்

2023 ஆம் ஆண்டின் 16ம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் கீழ் பணக் கொள்கைக் கட்டுக்கோப்பு உடன்படிக்கைக்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் காலாண்டுக்கான முதன்மைப் பணவீக்கம் 5மூ வீதத்தால் பேணிச் செல்லும் பொறுப்பு இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கையில் 26(5) ஆம் பிரிவுக்கமைய, குறித்த பணவீக்க இலக்குகளும் வேறு நிலை அளபுருக்களும் இரண்டு தொடர்ச்சியான காலாண்டு இடைவெளிக்குள் பூர்த்தி செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தவறினால், மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையால் அதுதொடர்பான அறிக்கையை நிதி விடயதான அமைச்சர் மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் காலாண்டுகளில் முறையே 1.4மூ மற்றும் 0.8மூ வீதமாகப் பதிவாகியுள்ளதுடன், அது குறித்த பணவீக்க இலக்கின் எறிவு நிலையை விடவும் தாழ்வாகக் காணப்படுகின்றது. குறித்த விடயங்கள் உள்ளடங்கலாக, மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் நிதி விடயதான அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள முதன்மைப் பணவீக்கம் பணச்சுருக்கம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. அரச முதலீட்டுக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய துரித மூலோபாயங்களைத் தீர்மானிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமித்தல்

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ சட்டத்தின் 44(3) ஆம் பிரிவுக்கமைய, பிரதம கணக்கீட்டு அலுவலர் மற்றும் கணக்கீட்டு அலுவலரால் வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில், அரச முதலீட்டுக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு துரித மூலோபாயத் தீர்மானங்களை எடுத்தல், திட்டமிடல், வளப் பகிர்வு செய்தல், வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்தல், நிதியிடல் மற்றும் மேற்பார்வை போன்றவற்றுக்குப் பொறுப்புக் கூறுகின்ற நிறுவனப் பிரதானிகள் பதினொரு (11) பேரை விஞ்சாத உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்படல் வேண்டும். கடந்த பத்து வருடங்களாக அரச மூலதன முதலீடுகளில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் மற்றும் மேற்கொண்டுள்ள செலவுகளுக்கு ஈடான அனுமூலங்கள் கிடைக்காமையால் இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியை நோக்கி;ப் பயணிப்பதற்கு இயலாமல் போயுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், அபிவிருத்திக் கருத்திட்டங்கள்ஃவேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது தாக்கம் செலுத்துகின்ற பல்வேறு பிரச்சினைகளைத் தடுப்பதற்கும், கருத்திட்ட முகாமைத்துவத்திற்கும் மேற்பார்வைக்கும் ஏற்புடையவாறு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் இயலுமாகும் வகையில் ஜனாதிபதி செயலாளரால் நியமிக்கப்படும் அமைச்சின் செயலாளர்கள் இருவர் மற்றும் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட 'அரச முதலீட்டு மேற்பார்வை மற்றும் மதிப்பீட்டுக் குழுவை' நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கையின் முதலாவது இருதரப்பு வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கை காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுக்கோப்பு சமவாயத்திற்குச் சமர்ப்பித்தல்

1993 ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான கட்டுக்கோப்பு சமவாயம் மற்றும் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் பரிஸ் உடன்படிக்கையின் பங்காளர்களாக இலங்கை செயலாற்றி வருகின்றது. அதற்கிணங்க, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான கட்டுக்கோப்பு சமவாயம் மற்றும் பரிஸ் உடன்படிக்கை மூலம் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கைள அமுல்படுத்துவதற்கான கடப்பாடு இலங்கைக்கு உண்டு. பரிஸ் உடன்படிக்கையின் 13 ஆம் உறுப்புரையின் கீழ் அனைத்துப் பங்களார்களும் 2024.12.31 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான கட்டுக்கோப்பு சமவாயத்திற்குரிய முதலாவது இருதரப்பு வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான கட்டுக்கோப்பு சமவாயத்தின், காலநிலை தொடர்பான அரசுகளுக்கிடையிலான அமைப்பு மற்றும் பரிஸ் உடன்படிக்கையின் வழிகாட்டல்களுக்கமைய இலங்கையின் முதலாவது இருதரப்பு வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான கட்டுக்கோப்பு சமவாயத்திற்கு சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நெற் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறை (Pledge loan Facility) 2024/2025 பெரும்போகத்திலிருந்து வருடாந்த வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தல்

நெல் அறுவடைக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தும் நோக்கில் சலுகை வட்டி வீதத்தில் அரச வங்கிகள் மூலமாக அடகுக் கடன் முறையொன்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2023.08.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த போகங்களில் இவ்வேலைத்திட்டம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமையால், 2024ஃ25 பெரும்போகம் தொடக்கம் ஒவ்வொரு போகத்திலும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறிப்பட்டுள்ளது. அதற்கமைய, திட்டவட்டமான அளவுகோல்களின் பிரகாரம், நாளாந்த நெல் குற்றும் கொள்ளவு உயர்ந்தபட்சம் 25 மெற்றிக்தொன் வரைக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு (கூட்டுறவுச் சங்க நெல் ஆலைகள் உள்ளடங்கலாக) அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் உயர்ந்தபட்சம் 50 மில்லியன் ரூபாய்கள் வரைக்கும் நெல் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறையை அமுல்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறல்ஃநடமாடல் பிரதேசத்தில் பிரபல வர்த்தக நாமங்களுக்குரிய பெண்கள் மற்றும் ஆடவர்களுக்கான புடவை விற்பனை நிலையங்களை நடாத்துதல்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறல்ஃநடமாடல் பிரதேசத்தில் பிரபல வர்த்தக நாமங்களுக்குரிய பெண்கள் மற்றும் ஆடவர்களுக்கான புடவை விற்பனை நிலையங்கள் 04 இனை 03 ஆண்டுகளுக்கு நடாத்திச் செல்வதற்கான இயக்குநர்களைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 03 விலைமனுதாரர்கள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளனர். அதற்கிணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் பிரகாரம், இரண்டு விற்பனை நிலையங்களை நடாத்திச் செல்வதற்காக இயக்குநர்களாக முறையாக M/s Odel PLC kw;Wk; M/s Insomnia (Pvt) Ltd இனைத் தெரிவு செய்வதற்கும்,ஏனைய விற்பனை நிலையங்களுக்கு மீண்டும் விலைமனுக்களைக் கோருவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 900,000 மெரபொனம் ஊசி ((Meropenem injection) 01 கிராம் குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை

தீவிர பற்றீரியாத் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மெரபொனம் ஊசி ((Meropenem injection) 01 கிராம் குப்பிகள் 900,000 இனை விநியோகிப்பதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அதற்காக 05 விலைமுறிகள் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன், விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களைக் கொண்ட குறைந்த விலைமுறிதாரரான பாகிஸ்தான் M/s Genix Pharma (Pvt) Ltd இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைத்துள்ளது. அதற்கிணங்க, 900,000 மெரபொனம் ஊசி ((Meropenem injection) 01 கிராம் குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகையை குறித்த கம்பனிக்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. டெனெக்டிப்ளேஸ் ஊசி (Tenecteplase injection) 40 மில்லிக்கிராம் குப்பிகள் 9,000 விநியோகிப்பதற்கான பெறுகை

இதய நோயாளிகளின் மரணத்தைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் டெனெக்டிப்ளேஸ் ஊசி (Tenecteplase injection) 40 மில்லிக்கிராம் குப்பிகள்9,000 கொள்வனவுக்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அதற்காக 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களைக் கொண்ட குறைந்த விலைமுறிதாரரான M/s ABC Pharma Services (Pvt) Ltd இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு இரண்டு மாடிகளைக் கொண்ட வார்ப்பிரும்புக் கட்டமைப்பிலான களஞ்சியமொன்றை நிர்மாணித்தல்

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு இரண்டு மாடிகளைக் கொண்ட வார்ப்பிரும்புக் கட்டமைப்புக் களஞ்சியமொன்றை இரத்மலானையில் நிர்மாணிப்பதற்கான தேசிய விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அதற்காக 10 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களைக் கொண்ட குறைந்த விலைமுறிதாரரானM/s Dockyard General Engineering Services (Pvt) Ltd இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. புவியியற்சார் குறிகாட்டிகளைப் பதிவு செய்வதற்காக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் ஒழுங்குவிதிகள்.

புவியியல் குறிகாட்டியை பதிவு செய்தல் தொடர்பான ஏற்பாடுகளை உள்ளடக்கி 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தை திருத்தம்செய்வதற்காக 2022.01.18 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, புவியியற்சார் குறிகாட்டிகளைப் பதிவு செய்தல் தொடர்பான ஏற்பாடுகளை உள்ளடக்கி 2022 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தை (திருத்தச்) சட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புவியியற்சார் குறிகாட்டிகளைப் பதிவு செய்வதற்கான ஒழுங்குவிதிகள் 2024.10.22 திகதிய 2407ஃ04 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கென பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

11. அரச அலுவலர்களின் பிணை கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

அரச அலுவலர்களின் பிணைக் கட்டளைச் சட்டத்துக்கு அமைய, அரச அலுவலர்களுக்கு பிணைமுறி விதிக்கப்படுவதன் மூலம் மேற்குறித்த அரச அலுவலர் தனது கடமையை நிறைவேற்றும் போது அவரால் அரசுக்கு ஏற்படக்கூடிய நட்டம் அவரால் வைப்பு செய்யப்பட்டுள்ள பிணைமுறியிலிருந்து அறவீடு செய்யப்படுகிறது. குறித்த செயன்முறையை எளிமையாகவும், காலத்துக்கு ஏற்ற வகையிலும் மேற்கொள்ளக்கூடிய வகையில் அரச அலுவலர்களின் பிணைக் கட்டளைச் சட்டத்தை முழுமையாக மீளாய்வுக்குட்படுத்த தேவையான திருத்தங்களை அடையாளம் காண்பதற்கான அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்கு 2023.11.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, மேற்குறித்த அதிகாரிகள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரச அலுவலர்களின் பிணைக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

12. 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தை மீள ஆராய்ந்து பார்த்தல்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்ட ஏற்பாடுகள் 2024.06.27 திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேற்குறித்த சட்ட ஏற்பாடுகள், முன்மொழியப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் பணிப்பொறுப்புகள் மற்றும் பொறுப்புகள் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் குறிக்கோளை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் பாதுகாப்பான மற்றும் தூய்மையான மின்சக்தி துறையை உருவாக்கும் போது மின்சக்தி தொழிற்துறை மற்றும் நுகர்வோர் மீது மேலதிகமாக சுமை சுமத்தப்படுகிறது எனவும், பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே,பேண்தகு மற்றும் பாதுகாப்பான மின்சக்தி துறையை நிறுவுவதற்கு அக்கறை கொண்டுள்ள தொடர்புடைய அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து, மின்சக்தி சட்டத்தின் குறிக்கோளை மீண்டும் ஆராய்ந்து பார்த்தல் கட்டாயமானதாகும். அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தை ஆராய்ந்து பொருத்தமான திருத்தங்களை விதந்துரை செய்வதற்காக பிரதான தரப்பினர் மற்றும் மின், வலுசக்தி துறை கொள்கை நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமிக்க மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவம்.

ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கும், சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆளணியை மீள நிலைப்படுத்தி உச்ச சேவையைப் பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான அலுவலர் குழுவை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. அரசாங்க அழுத்தகர் பதவிக்கு நியமனம் செய்தல்.

அரச அச்சக திணைக்களத்தில் அரசாங்க அழுத்தகர் பதவியில் சேவையாற்றும் திருமதி. ஜி. கே.டி.லியனஹே அவர்களது சேவைக்காலம் 2024.12.24 திகதி முடிவடைந்த பின்னர் குறித்த பதவி வெற்றிடமாக இருக்கும் மேற்குறித்த பதவிக்கு பொருத்தமான அலுவலரை நியமிக்க வேண்டியுள்ளது. தற்போது தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அலுவலர் திரு. கே.ஜி.பி. புஸ்பகுமார அவர்களை நியமிப்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய மேற்குறித்த அலுவலரை நியமிப்பதற்காக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை திருத்தம் செய்தல்

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் அமுல்படுத்திய பின்னர் குறித்த சட்டத்துக்கு அமைய புலனாய்வு, வழக்கு தாக்கல் செய்தல், நிர்வாக ரீதியான மற்றும் நீதிமன்ற ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுக்கு கணிசமான சட்ட ரீதியான பொருள்கோடல்கள் மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே மேற்குறித்த சட்டத்தின் சில பிரிவுகளை திருத்தம் செய்தல் மற்றும் புதிதாக சில பிரிவுகளை மேற்குறித்த சட்டத்தில் அறிமுகம் செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. அதற்கமைய 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை ஆய்வுசெய்து கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டிய பிரிவுகள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பிரிவுகள் தொடர்பான விதந்துரைகள் அடங்கிய விபரமான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளரின் தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வகைகூறுதலை உறுதி செய்வதற்காக அமைச்சுக்களில் விசாரணை அலகுகளை நிறுவுதல்.

தற்போதுஅரச சேவை தொடர்பில் நாளாந்தம் அதிகளவு முறைப்பாடுகள் பெயர் குறிப்பிட்டும், அநாமதேயமாகவும் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடைத்து வருகின்றது. அரசு மீது மக்கள் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக அரச சேவையில் எதிர்பார்க்கப்படும் சாதகமான மாற்றங்களை மேற்கொள்வதற்காக அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையிலும் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் விடயங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய, முன்னைய அரசுகளின் கீழ் அரச நிறுவனங்கள் செயற்பட்டுள்ள விதம் தொடர்பிலும், தற்போது அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் முன்வைக்கப்படும் பொது மக்களின் முறைப்பாடுகள், விளக்களித்தல் மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து தெரியவரும் தகவல்கள் தொடர்பான விடயங்களை விசாரணைசெய்வதற்காக அமைச்சு மட்டத்தில் நாடு தழுவிய சேவையில் முதலாம் தர அலுவலர் அல்லது புலனாய்வுச் செயன்முறை தொடர்பான அனுபவமுள்ள அரச சேவையின் முதலாம் தர நிறைவேற்று அதிகாரியின் தலைமையில் விசாரணைப் அலகை நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]