2025.09.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்கல்
உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வகுப்பறையொன்றிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மாத்திரம் பேண வேண்டியது அவசியமாகும். அதனால், நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தி, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக சரியான முறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, இடைநிலைத் தரங்களில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தற்போது கல்வி கற்கும் பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு உள்வாங்குவதற்கு உண்மையானக் தேவையாகவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் பாடசாலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, புதிய சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனை செயற்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள உபசெயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆலோசனைச் சுற்றறிக்கையை வெளியிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. தொழிற்பாட்டு நிலையில் இல்லாத அரச தொழில் முயற்சிகளை மூடுதல்
பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது, குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன. தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் குலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட குலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாக குலைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. அன்ரிகுவா மற்றும் பாபியுடா உடனான இராஜதந்திர தொடர்புகளை ஆரம்பித்தல்
இலத்தின் அமெரிக்கா மற்றும் கிரிபியன் பிராந்தியத்தில் 13 நாடுகளுடன் முறையான இராஜதந்திர தொடர்புகளை நிறுவுவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, அன்ரிகுவா மற்றும் பாபியுடா தவிர, குறித்த பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் இலங்கை அரசு தற்போது முறையான இராஜதந்திர தொடர்புகளை நிறுவுவதற்காக தற்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளும் பரஸ்பர ரீதியாக அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வது மற்றும் இரு நாடுகளிலும் அரசியல், சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார துறைகளில் காணப்படும் நட்புறவுகள் மற்றம் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு மற்றும் அன்ரிகுவா மற்றும் பாபியுடா அரசுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகளை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. கெரவலப்பிட்டிய சுங்க சரிபார்ப்பு நிலையத்தை அமைத்தல்
கெரவலப்பிட்டிய சுங்க சரிபார்ப்பு நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணித்துண்டை இலங்கை சுங்கத்திற்கு ஒப்படைப்பதற்காக 2025.03.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த சுங்க சரிபார்ப்பு நிலையத்தைத் அமைப்பதற்கான முறைமையைத் தீர்மானிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு ஆற்றல்வளத்துடன் கூடிய வியாபார மாதிரியொன்றைத் தெரிவு செய்வதற்காக பொருத்தமான குறிகாட்டிகளின் அடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள கெரவலப்பிட்டி சுங்க சரிபார்ப்பு நிலையத்தை அமைப்பதற்கான கருத்திட்டத்தை இரட்டைரக அரச – தனியார் பங்குடமை மாதிரியொன்றின் கீழ் அமுல்படுத்துவதற்குப் பொருத்தமான தனியார் பங்காண்மையாளர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்புக் கோரல் மற்றும் முன்மொழிக்கான கோரல் செயன்முறையைக் கடைப்பிடிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. சேனாநாயக்க சமுத்திரத்தின் மதகுக் கோபுரம், மதகுக் கதவு மற்றும் ஏனைய பகுதிகளை மீண்டும் நிர்மாணிக்கும் கருத்திட்டம்
1953.08.28 ஆம் திகதி மக்களுக்கு கையளிக்கப்பட்ட சேனாநாயக்க சமுத்திரத்தால் 120,000 ஏக்கர் வயல் காணிகளுக்கு நீர்ப்பாசனம் விநியோகிக்கப்படுவதுடன், 20 மெகாவாற்று வலுக் கொள்ளவுடைய மின்னுற்பத்தியையும் தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்குகின்றது. அதன் அணைக்கட்டு மற்றும் மதகுக் கோபுரத்திலும் மற்றும் மதகுக் கதவு மற்றும் பிரதான அணைக்கு வெளியே நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிவமைப்பிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளமையை 1992 ஆம் ஆண்டில் முதற்தடவையாக அவதானிக்கப்பட்டுள்ளது. காலத்தோடு குறித்த வெடிப்பு அதிகரித்தும், பரந்தும் சென்றுள்ளது. இதற்கான நிரந்தர தீர்வாக, குறித்த வடிவமைப்புக்கள் மீண்டும் நிர்மாணிக்கப்பட வேண்டுமென அடையாளங் கண்டிருப்பிப்பினும், நிர்மாணத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாலும், 02 வருடங்கள் நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்பட வேண்டியமையால் அதிகளவான பயிர் நிலங்களுக்கு பாசன நீர் விநியோகம் செய்ய முடியாமல் போவதால், நாட்டில் அரிசித் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படல் மற்றும் போதியளவு தொழிநுட்ப இயலுமைகள் இன்மையால் புதிய மதகு வடிவமைப்புக்களை இதுவரை செய்ய முடியாமல் போயுள்ளது. தற்போது நிலவுகின்ற இடர் மற்றும் அனர்த்தத்தின் போது ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்காக 2025 சிறுபோகத்திற்கு நீர் விநியோகம் செய்யப்பட்ட பின்னர், நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவின் 40மூ சதவீதத்தைப் பேணியவாறு முன்மொழியப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, உலகில் தற்போதுள்ள நவீன தொழிநுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டு நிர்மாணிப்பதற்குப் பொருத்தமான ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுப்படுதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. மூன்று இலகுரக பயணிகள் கூடங்களுடன் கூடிய புகையிரதத்தை உள்நாட்டில் ஒருங்குசேர்த்து தயாரித்தல்
தற்போது பாவனையிலுள்ள புகையிரதங்கள் அதிகளவில் நகர்ப் பிரதேசங்களில் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், கிராமிய சமூகத்தவர்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான புகையிரதப் பேரூந்துகள் சில மாத்திரம் தற்போது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், தற்போதுள்ள புகையிரத நேர அட்டவணைக்கமைய, பேரூந்துப் புகையிரப் போக்குவரத்தில் நடைமுறை ரீதியில் சிக்கல்கள் காணப்படுகின்றன. அத்துடன், போதியளவு பயணிகளின் எண்ணிக்கை இன்மையால் நகர்ப் பிரதேசங்களில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரதங்களை கிராமப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுத்துவது பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் அமையாதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், கிராமிய மட்டத்தில் சேவையில் ஈடுபடுத்தக் கூடிய வகையில், புகையிரத கூடங்களுக்குப் பொருத்தப்படும் டீசல் இயந்திரத்தின் மூலம் இயங்குகின்ற இலத்திரனியல் கட்டுப்பட்டுத் தொகுதி மற்றும் ஏனைய நவீன வசதிகளுடன் கூடிய, 03 புகையிரதக் கூடங்களுடன் கூடிய இலகுரக புகையிரதங்கள் புத்தளம், மட்டக்களப்பு மற்றும் மிஹிந்தல பிரதேசங்களில் புகையிரதப் பயணப் பாதைகளில் அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, கிராமிய மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் 200 – 240 பயணிகள் கொள்ளளவுடைய மற்றும் போதியளவு பண்டங்களை ஏற்றிச் செல்வதற்கான வசதிகளுடன் கூடிய 03 புகையிரதக் கூடங்களுடன் கூடிய புகையிரதமொன்றை உள்நாட்டில் ஒருங்குசேர்த்துத் தயாரிப்பதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில்விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. நன்னீர் மீன் உற்பத்திகளைப் பாதுகாப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தர நீர்த்தேக்கங்;களில் தடை வலைகளை அமைத்தல்
கிராமியப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு போசாக்கான உணவு வேளையை வழங்குவதில் நன்னீர் மற்றும் உயிரின வளர்ப்பு பாரிய பங்காற்றுகின்றது. ஆனாலும், நாட்டில் உள்ளகப் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் வான்பாயும் போதும், மதகு வழியாக நீர் வெளியேற்றம் செய்யும் போதும் மீன்கள் வெளியே அடித்துச் செல்லப்படுகின்றமையால் நன்னீர் மீன்கள் அதிகளவில் குறைவடைகின்றது. ஒரு நன்னீர் நீர்த்தேக்கத்திலிருந்து ஓராண்டுக்கு 20,000 – 40,000 கிலோகிராம் மீன்கள் இவ்வாறு மனிதப் பயன்பாட்டுக்கு முன்னரே வெளியேறுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. முதிர்ச்சியான மீன்கள் வெளியே அடித்துச் செல்லப்படல், மீன்கள் குறைவடைவதற்கும், மீன் உயிரினப் பெருக்கத்திற்கும் இயலளவுடைய முதிர்ச்சியான மீன்கள் வெளியேறுகின்றமையால், எதிர்காலத்தில் மீன்கள் வெகுவிரைவாகக் குறைவடையுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால், நன்னீர் மீன் உற்பத்தி குறைவடைவதைத் தடுப்பதற்கும், நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் 02 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 நீர்த்தேக்கங்களில் தடை வலைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை தேசிய நீரியல்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அமுல்படுத்துவதற்கு மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. பாராளுமன்ற உறுப்பினர்களால் 'வியத்புர' வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதல்
2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் வீடுகளை இழந்த அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர வீட்டுத்தொகுதியில் 101 வீட்டு அலகுகளை ஒருவருட வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு 2022.07.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், குறித்த வீடுகளை சலுகை முறையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கமைய, 15.5 மில்லியன் குறைந்தபட்ச விலை மற்றும் 22 மில்லியன் உயர்ந்தபட்ச் விலைக்கு சாதாரண மக்களுக்கு விற்பனை செய்கின்ற வீட்டு அலகொன்றை, 13.34 குறைந்தபட்ச விலை மற்றும் 18.21 மில்லியன் அதிகபட்ச விலைக்கும் குறைத்து சலுகை முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கும், விற்பனை விலையில் 25% சதவீதத்தை ஆரம்பக் கட்டணமாக அறவிட்டு, எஞ்சிய தொகையை 15 வருடங்களில் 10% ஆண்டுக்கான வட்டி வீதத்தின் கீழ் அவர்களிடமிருந்து அறவிடுவதற்கும், 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முறைமையின் கீழ் வீட்டு அலகைக் கொள்வனவு செய்வதற்காக 29 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2024.12.31 அன்று வரை விற்பனை விலையின் 25% சதவீதத்தை வைப்பிலிட்டுள்ளனர். ஆயினும், இச்சலுகை முறையால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு 92.126 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், செலவை ஈடுசெய்வதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், மேற்குறிப்பிட்டவாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சலுகை முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கும், குறித்த 29 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்பாடு தெரிவிப்பின் சாதாரண மக்களுக்கு குறித்த வீட்டு அலகைக் கொள்வனவு செய்யும் முறை மற்றும் விலைக்கமைய அவர்களுக்கும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடாத்துதல்
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது. காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. தேசிய கலாபவனத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் கருத்திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்தல்
தேசிய கலாபவனத்தை பாதுகாக்கும் கருத்திட்டத்தின் பணிகள் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கருத்திட்டத்தின் அனைத்துப் பணிகளும் 2024 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கு 2024.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், குறித்த பணிகள் கடந்த வருடத்தில் முழுமையாக பூர்த்தி செய்வதற்கு இயலாமல் போயுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் கீழ் அதற்காக 120 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கருத்திட்டத்தின் வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக குறித்த நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததுடன் மேலும் 32 மில்லியன் ரூபாய்கள் நிதி தேவைப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய தேசிய கலாபவணத்தை நவீனமயப்படுத்தல் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்காக மேலதிக வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. இலங்கை கோள் மண்டலத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணிகளை மேற்கொள்ளல்
இலங்கை கோள் மண்டலம், 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கைத்தொழில் கண்காட்சியின் பிரதான பகுதியாக கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க அவர்களால் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த கட்டிடத்தின் கட்டமைப்பு உக்கலடைதல் மற்றும் பௌதீக வசதிகள் மற்றும் தொழிநுட்ப உட்கட்டமைப்புக்கள் காலங்கடந்த நிலைமையை அவதானிக்கப்பட்டுள்ளமையால், விசேட கட்டிடக்கலை நுட்பங்களின் இயல்புகளை மாறாத வகையில் குறித்த புனரமைப்புப் பணிகளை செய்ய வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய தேசிய பெறுகை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள உடன்பாட்டின் பிரகாரம், முன்னரே பொருத்தப்பட்ட கொன்கிறீட் தொழிநுட்பம் தொடர்பான விசேட அறிவு கொண்டுள்ள முன்னுரிமை அரச நிறுவனமான தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERD) இற்கு குறித்த பணிகளை ஒப்படைப்பதற்காக விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. 1980 ஆம் ஆண்டின் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (கூட்டிணைக்கப்பட்ட) சட்டத்தை திருத்தம் செய்தல்
1980 ஆம் ஆண்டின் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (கூட்டிணைக்கப்பட்ட) சட்டத்தின் மூலம் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ளதுடன் அது இலங்கை வயம்ப பல்கலைக்கழகம், இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராசரட்டை பல்கலைக்கழகம் உள்ளிட்ட எமது நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள்ஃபல்கலைக்கழகங்களுடன் பலமான பங்கான்மையை பேணிக்கொண்டு சந்தைப்படுத்தல் கல்வியை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிதத் நிறுவனத்தின் மூலம் வருடாந்தம் சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்முயற்சி, முயற்சியாண்மை தொழில் தகைமைகளுடன் கூடிய 8,000 மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுவதுடன், எமது நாட்டின் முன்னணி கம்பனிகள் தமது பணியாளர்களுக்கு சந்தைப்படுத்தல் பயிற்சியை வழங்குவதற்காக குறித்த நிறுவனத்தின் சேவைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. குறித்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்காகவும் மற்றும் மேலும் வினைதிறனாக மேறகொள்வதற்கும் இயலுமான வகையில் 1980ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (கூட்டிணைக்கப்பட்ட) சட்டத்தின் ஏற்பாடுகளை திருத்தம் செய்யவேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டத்திருத்தத்திற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தல் சட்டத்தின் கீழான தவறுகளுக்கு ஏற்புடைய அபராதத் தொகையை திருத்தம் செய்தல்
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தல் சட்டத்தின் மூலம் 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் 16 வயதுக்கு மேற்பட்டதும் 18 வயதுக்கு குறைவான இளம் ஆட்களை தொழிலுக்கு அமர்த்துதல் தொடர்பாக தொழில் வழங்குனர் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த சட்டம் மற்றும் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக குறித்த வயதெல்லையிலுள்ள சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் மற்றும் விழுமியங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலான அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும். குறித்த சட்டத்தில் 2003 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் அச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தவறிழைக்கின்ற நபரொருவர் 10,000 ரூபாயை விஞ்சாத தண்டப்பணம் அல்லது 12 மாதங்களை விஞ்சாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டில் ஒன்று தண்டனையாகவோ அல்லது குறித்த அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டும் மற்றும் நீதிமன்ற கருதுகின்ற வகையில் இன்னலுற்ற பிள்ளைக்கு இழப்பீட்டை விதிப்பதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் குறித்த தண்டப்பணத்தின் பெறுமதி போதியளவாக இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இலங்கையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 138 மற்றும் 182 சமவாயங்களுக்கு இணங்கி 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தல் சட்டத்தின் 7(3), 13(2) மற்றும் 20(அ) (3) பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தண்டப்பணத்தின் பெறுமதியை காலத்தோடு தழுவியதாக திருத்தம் செய்வதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. குடிசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்;
தற்போது குடிசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய திருமதி டீ.டீ.ஜீ.ஏ.செனவிரத்ன அவர்கள் 60 வயது பூர்த்தி 2025.09.05 தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அதற்கமைய வெற்றிடமடைகின்ற தற்போது குடிசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது அத்திணைக்களத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட மேலதிக நாயகமான திருமதி கே.எம்.டீ.எஸ்.டீ. கருணாரத்ன அவர்களை அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. வதிவிடமற்ற விநியோகத்தர்களால் இலத்திரனியல் தளங்கள் மூலமான சேவை வழங்கலுக்கான பெறுமதிசேர் வரியை அமுல்படுத்தும் திகதியை திருத்தம் செய்தல்
2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் 2025.10.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் வதிவிடமற்ற ஆட்களால் (Non – Resident) டிஜிட்டல் சேவை வழங்கல்களுக்கு சேர்பெறுமதி வரி சேர்க்கப்பட்டுள்ளது. ஆயினும், டிஜிட்டல் சேவைகளுக்கான சேர்பெறுமதி வரி அறிவிடும் போது அதற்கு இயங்கியொழுகுவதற்கு தயாராவதற்கு மேலதிக காலத்தை வழங்குமாறு நடைமுறைச் சாத்தியமான பல காரணங்கள் குறிப்பிடப்பட்டு வதிவிடமற்ற சேவை வழங்குநர்களால் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, 2025.10.01 ஆம் திகதிக்குப் பதிலாக குறித்த வரி நடைமுறையை 2026.04.01 ஆகத் திருத்தம் செய்வதற்காக, அதற்கு திருத்தப்பட்ட ஏற்பாடுகள் தற்போது வரைவாக்கம் செய்யப்பட்டு சேர்பெறுமதி சட்டத்தைத் திருத்தம் செய்யப்பட்டு வருகின்ற சட்டமூலத்தில் சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான வரைபை உட்சேர்ப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்;ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. என்பு பொருத்துதல், என்புமுறிவுகளை நிலைப்படுத்தல் மற்றும் நேர்த்தியான சரிப்படுத்தல்களை
உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்துகின்ற உபகரணங்களை விநியோகம் செய்வதற்கான பெறுகை
என்பு பொருத்துதல், என்புமுறிவுகளை நிலைப்படுத்தல் மற்றும் நேர்த்தியான சரிப்படுத்தல்களை உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்துகின்ற உபகரணங்களை விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக இரண்டு (02) விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், குறித்த உபகரணத் தொகுதிகளை எஸ்ஆர் இலக்கம் : 21209104 இன் கீழ் 24 வகைகள், எஸ்ஆர் இலக்கம் : 21209101 இன் கீழ் 30 வகைகள் மற்றும் எஸ்ஆர் இலக்கம் : 21209004 இன் கீழ் 20 வகைகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையை இலங்கையின் ஆMedisurg International (Pvt) Ltd இற்கு 435,000 அமெரிக்க டொலர் தொகைக்கு வழங்குவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. டெனெக்விப்லேஸ் 40 மில்லிகிராம் 30,000 ஊசி மருந்துக் குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை
இதய நோயாளிகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற டெனெக்விப்லேஸ் 40 மில்லிகிராம் 30,000 ஊசி மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக மூன்று (03) விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், குறித்த பெறுகைக்குக் கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான இலங்கையின் ABC Pharma Services (Pvt) Ltd. (Manufacturer : Reliance Life Sciences Pvt Ltd, India இற்கு 2,385 மில்லியன் ரூபாய் மொத்தத் தொகைக்கு வழங்குவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. ஹொலோ ஃபயிஃபர் டயலைசர், பொலயல்ஃபோன்ஃபொலிஈதர்சல்ஃபோன்ஃபொலிநெஃப்ரோன், குறைந்த ஓட்டத்திலிருந்து கூடிய ஓட்டம் வரையான 1.6 அ2 – 1.8அ2 இன் 680,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை
குருதிக் கூழ்மப்பிரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஹொலோ ஃபயிஃபர் டயலைசர், பொலயல்ஃபோன்ஃபொலிஈதர்சல்ஃபோன்ஃபொலிநெஃப்ரோன் போன்ற மருந்துப் பொருட்களின் பெறுகைக்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக இரண்டு (02) விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், குறித்த பெறுகைக்குக் கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான இந்தியாவின் சீனாவின் Bain Medical Equipment (Guangezhou) Co. Ltd இற்கு 2.087 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. குருதிநாள ஊசியேற்றப் பயன்பாட்டுக்கான ஹியூமன் இமுயுயுனோக்குளோபின் பிபீ, 5-6 கிராம் 120,000 ஊசிமருந்துக் குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை
நோய் எதிர்ப்புச்சக்திக் குறைபாடுடைய நோயளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் குருதிநாள ஊசியேற்றப் பயன்பாட்டுக்கான ஹியூமன் இமுயுயுனோக்குளோபின் பிபீ, 5-6 கிராம் 120,000
ஊசிமருந்துக் குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக மூன்று (03) விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான இந்தியாவின் சுநடயைnஉந டுகைந ளுஉநைnஉநள (Pஎவ) டுவன இற்கு 10.506 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


