1,000 இளைஞர் தொழில்முனைவோரை உலகளாவிய சந்தைக்கு இட்டுச் செல்லும் 4I திட்டம்

1,000 இளைஞர் தொழில்முனைவோரை உலகளாவிய சந்தைக்கு இட்டுச் செல்லும் 4I திட்டம்
  • :
1,000 இளைஞர் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் (4I Project) மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்கான (Liaison Officers) விசேட பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக இலங்கை மன்றக் கல்லூரியில் (Sri Lanka Foundation Institute - SLFI) நடைபெற்றது. நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் மேலதிக மாவட்ட செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட 40 உத்தியோகத்தர்களுக்காக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.

 கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் இந்த 4I திட்டத்தின் ஊடாக, 1,000 சிறு மற்றும் நடுத்தர அளவிலான இளைஞர் தொழில்முனைவோரின் உலகளாவிய சந்தை பிரவேசத்திற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்குகளை மேம்படுத்தி அவர்களை வலுவூட்டும் பணிகள் முன்னெடுக்கப்படும். மேலும், இந்த 4I திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தொழில்முனைவோரின் ஏற்றுமதிச் சந்தை பிரவேசத்தில் உள்ள தடைகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதன் ஊடாக அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும் மேற்கொள்ளப்படும்.

Related Articles