முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் 

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் 
  • :

சுகாதாரசேவைக்குரிய நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசர சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு (ஆம்புலன்ஸ்) வண்டி ஒன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தலைமையில் நேற்று (30) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் வழங்கப்பட்டது.

இந்த நோயாளர் காவு வண்டியானது "நிசான்" வகை நோயாளர் ஊர்தியாகும்,

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட இந்த நோயாளர் காவு வண்டியானது அது சார்ந்த பணிகளுக்காக பயன்படுத்தப்படாததால், இந்நாட்டின் சுகாதார சேவையின் தேவையை கருத்திற் கொண்டு அதனை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிடம் ஒப்படைக்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் அம்புலன்ஸ் வாகனம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாக (30) கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர். குமார விக்கிரமசிங்க, பிரதி பணிப்பாளர் நாயகம் (விநியோகம்/ தளவாடங்கள்) எச்.எம்.என். டினிபிரிய ஹேரத், பணிப்பாளர் (போக்குவரத்து) முதித விமலசேன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles