10 கிலோகிராமுக்கு மேற்பட்ட ‘குஷ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

10 கிலோகிராமுக்கு மேற்பட்ட ‘குஷ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது
  • :

2026.03.18 அன்று அதிகாலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகைப் பிரிவில்,

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விமான நிலைய அலகின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனையில், 05 கிலோ 286 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் ஒரு சந்தேகநபரும், மேலும் 05 கிலோ 266 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 வயதுடைய சந்தேகநபர்கள், ஹக்மண மற்றும் அங்குனகொலபெலஸ்ஸ பகுதிகளில் வசிப்பவர்கள்.
மேலும் விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் பொருள் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

Related Articles