பதுளைக்கும் ஹாலிஎலவுக்கும் இடையிலான 179/60 மைல்கல்லுக்கு அருகிலுள்ள ரயில் பாதை 2025 மார்ச் 01 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டதுடன் இதனால் அப்பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
நிலைமையைக் கருத்தில் கொண்டு, 2 வது இலங்கை ரைபில் படையணியின் ஒர் அதிகாரி மற்றும் 20 சிப்பாய்கள் உடனடியாக சம்பவ்விடத்துக்கு விரைந்து, தண்டவாளத்தை சீரமைப்பதில் ரயில்வே திணைக்களத்திற்கு உதவினார்கள். அவர்கள் விரைந்து கழிவுகளை அகற்ற உதவியதுடன் இதனால் ரயில் நடவடிக்கைகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.