2024/25 பெரும்போகத்தின் பயிர் பாதிப்புகளுக்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் நிறைவடைவது தொடர்பாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை விடுத்துள்ள அறிவித்தல்

2024/25 பெரும்போகத்தின் பயிர் பாதிப்புகளுக்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் நிறைவடைவது தொடர்பாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை விடுத்துள்ள அறிவித்தல்
  • :

2024 நவம்பர் மாதத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக 2025.03.11 அன்றிலிருந்து 53,511 விவசாயிகளுக்கு 61,071 ஏக்கர் விவசாய நிலங்களுக்காக 952 மில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.



இலங்கையின் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் காரணம் வழங்கப்பட்டு நிறைவடைவதற்கு இந்தப் போகத்தில் முடிந்தமை கவனிக்க வேண்டிய விடயம் என்பதுடன் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் விவசாயிகளுக்காக வழங்கப்படும் பங்களிப்புகளை நன்றாக பிரதிபலிக்கும் விசேட சந்தர்ப்பமாகக் குறிப்பிடலாம்.

இந்த வெள்ளத்தினால் பாரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன.

அதன்படி அந்த மாவட்டங்களில் பயிர் பாதிப்பு நிவாரண நிதியை விரைவாக விடுவிடுவிப்பதற்காக கமநல சேவைகள் நிலையங்களின் சிபாரிசுகள் கருத்திற் கொள்ளப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி செயல்பட்டு, அந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்த செயற்பாடுகளின் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் மற்றும் வெளிப்படையுடன் மேற்கொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதனால் கமநல சேவை மத்திய நிலையங்களின் சிபாரிசு செய்யப்பட்ட விவசாய பாதிப்பிற்காக மாத்திரம் நிவாரணம் வழங்கப்பட்டது. அவ்வாறு விவசாயிகளை அடையாளம் காணும் பிரச்சினை, தேசிய அடையாள அட்டை இலக்கங்களின் முரண்பாடு, வங்கிக் கணக்கு விபரங்கள் பிழையானவை, மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசு முழுமை பெறாமை, பாதிப்பு அறிக்கையிடல் முறையாக மேற்கொள்ளப்படாமை உட்பட சிறு சிறு குறைபாடுகளுடன் காணப்பட்ட ஆவணங்களுக்காக நிவாரணம் வழங்குவது இடை நிறுத்தப்பட்டது என்றும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

51f724eb 53b9 4ea1 9038 8d8ade5b20d5

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]