2025 மார்ச் 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்வதனால் ஏற்படக் கூடிய தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.