2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடாத்துவதற்கு நாளை (11) நள்ளிரவு 12:00 மணி முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி தொடங்கி மார்ச் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.