2025 ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் வருகை 16 இலட்சத்தை எட்டியது   

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் வருகை 16 இலட்சத்தை எட்டியது    
  • :

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  1,604,018 வரை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி செப்டம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம்  37,495 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

 

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம், ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அதிகளமான சுற்றுலா பகுதிகள் வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Related Articles