* செப்டம்பர் 21 மக்கள் பலத்தின் பிரதிபலிப்பே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது .*
*அமைச்சர் விமல் ரத்னநாயக்க *
ඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃඃ
“கடந்த அரசாங்கத்தின் அரசியலை மையமாகக் கொண்டு அரசாங்க நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு இடம் பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட அரசாங்க நிறுவனங்களில் எவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்டது என்பது முழு நாடும் அறிந்ததே. ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட முறை, நிரந்தரமாக்கப்பட்ட விதம், பல கோடி ரூபாய்கள் வீணடிக்கப்பட்டவை யாவும் தெரிந்ததே. 2024 செப்டம்பர் 21 மக்கள் எடுத்த சரியான துணிகரமான தீர்வு இந்த நாட்டை மாற்றுப்பாதையில் கொண்டு சென்றது. கடந்த அரசாங்கத்தினால் மனச்சாட்சி இன்றி, மோசமான அரசியல் நோக்கம் செயற்படுத்தப்பட்டது. அந்த யுகத்தை முடிவுறுத்தி வன்முறையான நிர்வாகத்தின் கீழ் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, ஊழல் நிறைந்த ஆட்சியின் கீழ் சமத்துவத்துடன் செயல்படும் ஒரு அரசாங்கம் இப்போது உருவாகியுள்ளது.”
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் சபை முதல்வர் இந்தக் கருத்துக்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக சேவையில் உள்ள ஊழியர்களை நிரந்தர சேவைக்கு நியமிக்கும் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு அலறி மாளிகை கேட்போர் கூடத்தில் நேற்று (2025.09.08) நடைபெற்றது.
இதன் போது வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 704 உத்தியோகத்தர்களுக்காக நிரந்தர நியமனங்களை வழங்கும் வகையில் நிகழ்வு இடம் பெற்றது. 2017 ஆம் ஆண்டின் பின்னர் அதிகார சபையில் நிரந்தர சேவைக்கு உள்வாங்கப்பட்ட இந்த ஊழியர்கள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவையாற்றுவதற்காக இன்று முதல் தமது தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவார்கள்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்தநாயக்க : “வீதி அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலங்களில் பல்வேறு வகைப்பாடுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டுள்ளது. ஊழியர்களின் உரிமைகளுக்காக இந்த அரசாங்கம் அர்ப்பணிப்பு செய்யும். அரசியல் காரணங்களுக்காக, நிர்வாக காரணங்களுக்காக தொழில் உரிமைக்கு தடையாக இருக்க முடியாது. தொழிலில் நிரந்தரத் தன்மை என்பது வாழ்க்கை தொடர்பான ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகும். இன்று அது இடம் பெற்றுள்ளது. இதனால் வாழ்க்கைக்கு திட்டம் உடல் ஒன்றை மேற்கொள்ள முடியுமாக உள்ளது. கடந்த நிர்வாக காலப்பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆட்சேர்ப்பு செய்த விதம், நிரந்தரமாக்கிய விதம் , அபிவிருத்தியின் பெயரில் பணம் மோசடி செய்யப்பட்ட விதம் என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டின் கடந்த சில நிர்வாகிகள் மோசமான, தீய செயல்களை மேற்கண்டமை தனியாக அல்ல. அவற்றுக்கு வணிக குழுவினர், அதிகாரிகள் குழு, தொழிலாளர் குழு, தமக்கு வாய்ப்பாக பயன்படுத்தினார்கள்.”
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித ருவன் கொடி துவக்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


