2025 ஆம் ஆண்டு இதுவரையில் 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவு

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவு
  • :

இந்த ஆண்டு இதுவரையில் நாட்டில் சுமார் 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் டெங்கு அதிக ஆபத்துள்ள 16 மண்டலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதத்தில 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர், அதன் எண்ணிக்கை 849 ஆகும்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 740 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் இருந்து 337 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் இருந்து 354 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 321 நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 219 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.476021504 1188019949551205 4164147803892883493 n 1

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]