பெருமைமிக்க 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தேசத்தை கௌரவிக்கும் வகையில் கடற்படையினரால் 25 துப்பாக்கி சூட்டு வணக்கம் செலுத்தப்பட்டது

பெருமைமிக்க 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தேசத்தை கௌரவிக்கும் வகையில் கடற்படையினரால் 25 துப்பாக்கி சூட்டு வணக்கம் செலுத்தப்பட்டது
  • :

'தேசிய மறுமலர்ச்சி' என்ற தொனிப்பொருளில் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் 25 தடவைகள் துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் செலுத்தி நாட்டுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், இன்று (2025 பெப்ரவரி 04) மதியம் 1200 மணி அளவில் சயுர கப்பலின் கட்டளை அதிகாரி,கெப்டன் சந்தன பிரியந்தவினால் வழிநடத்தப்பட்டது.

துப்பாக்கி சூட்டு வணக்கத்தால் வழங்கப்படும் அதிகூடிய எண்ணிக்கையான 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் தேசத்திற்காக வழங்கப்படுவதுடன், இவ் வணக்கத்தை செலுத்தும் முறைக்கு 14 ஆம் நூற்றாண்டு வரையிலான நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டு வணக்க வரலாற்றில் முதல் தடவையாக 1948 ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அப்போதைய அரச கடற்படையினரால் சுதந்திர தினத்திற்காக துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்படி, இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் நாட்டுக்கு 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் செலுத்தும் பாரம்பரியம் கடற்படையினரால் கடைப்பிடித்து வருவதுடன், 2021 ஆம் ஆண்டு முதல் கப்பலில் இருந்து 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் செலுத்துவதற்கு ஆரம்பித்தனர். அதன்படி, இன்று (2025 பெப்ரவரி 04) நண்பகல் 1200 மணியளவில் இலங்கை கடற்படை கப்பலான சயுரவில், கடற்படையினரால் இலங்கை தேசத்தை கௌரவிக்கும் வகையில் 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் செலுத்தப்பட்டது.

மேலும், துப்பாக்கி சூட்டு வணக்கத்தின் போது, கப்பலின் கொடி மரக்கம்பத்தில் உள்ள கொடிகளில் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களைப் பயன்படுத்தி ‘25 Gun Salutes for the Nation’ என்ற தகவலுடன் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கப்பல் கடற்படையினரால் அலங்கரிக்கப்பட்டது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]