நலன்புரி நன்மைகள் சபையினால் 2025 செப்டம்பர் மாத அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு 2025 செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 11,201,647,000.00 (பதினொரு பில்லியன் இருநூற்று ஒரு மில்லியன் அறுநூற்று நாற்பத்தேழாயிரம்) ரூபாய் நிதி 1,412,574 (பதினான்கு இலட்சத்து பன்னிரண்டாயிரத்து ஐநூற்று எழுபத்து நான்கு) பயனாளிகள் குடும்பங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களின் அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுவத்ற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதியில் இருந்து தமது அஸ்வெசும கொடுப்பனவு தமது அஸ்வெசும நன்மைகள் வங்கி கணக்குகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ம் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
*


