தைப்பொங்கல் விழா, மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை புகையிரத சேவை கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் விசேட புகையிரத போக்குவரத்து திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் கால அட்டவணை பின்வருமாறு;
விசேட புகையிரத இல. 01 -கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படுதல்
- இரவு 07.30 க்கு
புகையிரதம் செல்லும் தினங்கள்
- 2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31 2025 பெப்ரவரி 02, 04
விசேட புகையிரத இல. 02- பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை
பதுளையில் இருந்து புறப்படுதல்
- இரவு 07.40 க்கு
புகையிரதம் செல்லும் தினங்கள்
2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31 2025 பெப்ரவரி 02, 04
விசேட நகர புகையிரதம் (4021 / 4022 ) - கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படுதல்
- அதிகாலை 05.30 க்கு
காங்கேசந்துறையில் இருந்து புறப்படுதல்
- நண்பகல் 01.50 க்கு
புகையிரதம் செல்லும் தினங்கள்
- 2025 ஜனவரி 10, 13,14,15,17,20,24,27,31 2025.பெப்ரவரி 03,04
ஊடகப் பிரிவு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு