2026.03.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01. வட்டியில்லாத கடன் திட்டத்தில் தேசிய சேமிப்பு வங்கியை இணைத்துக் கொள்ளல்
கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களில் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களுக்கு அரசுசாரா உயர்கல்வி நிறுவனங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிப் பாடநெறிகளைக் கற்பதற்காக வட்டியில்லாத மாணவர்களுக்கான கடன் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. தற்போது குறித்த கடன்திட்டத்தை மக்கள் வங்கியும் இலங்கை வங்கியும் வழங்கி வருகின்றது. தற்போது இக்கடன்திட்டத்தின் 10 ஆவது கட்டத்தின் கீழ் 7,000 மாணவர்களுக்கான கடன் வசதிகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு மேலதிகமாக குறித்த கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்குகின்ற வங்கியாக தேசிய சேமிப்பு வங்கியையும் இணைத்துக் கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைக்கான கடவுச்சீட்டு உரித்துடையவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் நேபாள அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
இலங்கை மற்றும் நேபாள அரசுகளுக்கிடையில் நிலவுகின்ற ஒத்துழைப்புக்களின் முக்கியத்துவத்தை அடையாளங்கண்டு, கடமைகளுக்காக இரண்டு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படுகின்ற பயணங்களுக்கு வசதியளிப்பதும், வீசாவைப் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படுகின்ற தேவையற்ற தடைகளை நீக்குவதையும் நோக்கங்களாக் கொண்டு, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக இரண்டு தரப்பினர்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். அதற்கமைய, இரு நாடுகளிலுள்ள இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைக்கான கடவுச்சீட்டு உரித்துடையவர்களுக்கு வீசாவைப் பெற்றுக்கொள்ளாமல் 30 நாட்களை விஞ்சாத காலப்பகுதிக்கு உடன்படிக்கை செய்துகொண்ட தரப்பின் ஆட்புலத்திற்குள் நுழைவதற்கும் அதனூடாகப் பயணிப்பதற்கும் தங்கியிருப்பதற்கும் இயலுமை கிடைக்கும் வகையில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. விஞ்ஞான ரீதியில் அனர்த்தங்களுக்கான தாங்குதிறன் மூலோபாயத் திட்டத்தை அமுல்படுத்துதல்.
2025 நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட தித்வா அயன மண்டல சூறாவளி காரணமாக அண்ணளவாக 2.3 மில்லியன் இலங்கை மக்கள் பாதிப்புக்குள்ளாகியதுடன், 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மொத்தப் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டமை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறித்த அனர்த்த காலத்தில் நாட்டின் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையும், மலையக மற்றும் கரையோர சுற்றாடல் தொகுதிகளுக்கும் மோசமான சேதங்கள் ஏற்பட்டதுடன், இச்சம்பவம் தேசிய உட்கட்டமைப்பு வசதிகளில் நிலவும் முக்கியமான கட்டமைப்பு ரீதியான பலவீனமான காலநிலை நெருக்கீட்டு பரிசோதனை (Climate Stress Test) என அடையாளங் காணப்பட்டுள்ளது. அதனால் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சால் அனர்த்த முகாமைத்துவப் பணிகள், 'பதிலளிப்பு மற்றும் மீளமைப்பு' அடிப்படையாகக் கொண்ட அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் பதில்வினையாற்றுகின்ற மாதிரி வடிவமைப்பு தொடக்கம் 'விஞ்ஞான ரீதியான அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் அதற்கான தாங்குதிறன்' வேலைச்சட்டகமாக மாற்றுவதற்காக வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வேலைத்திட்டத்திற்காக 2026.01.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 'காலநிலை நெருக்கீட்டு பரிசோதனையாக தித்வா புயல் அனர்த்தத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்' எனும் தொனிப்பொருளில் 2026.01.14 அன்று நிறுவன ரீதியான ஆய்வுத் தேவைகளை மதிப்பீடு செய்யும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கண்காணிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவால் விஞ்ஞான ரீதியில் அனர்த்தங்களுக்கான தாங்குதிறன் மூலோபாய ஆய்வுகள் மற்றும் கட்டமைப்புகள் விருத்திக்காக 07 விதப்புரைகளும், இவ்விதப்புரைகளை அமுல்படுத்தல் மற்றும் வலுப்படுத்தல் தொடர்பான 07 விதப்புரைகளுடன் கூடிய குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த இரட்டை மூலோபாயத்தை அமுல்படுத்துவதற்காக விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 2026 – 2028 காலப்பகுதிக்கான சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அமுல்படுத்தல்
பேண்தகு சுற்றுலாத் தொழிற்றுறையை உறுதி செய்வதற்காக இலங்கையின் சுற்றுலா ஆற்றல்வளங்கள் நிலவுகின்ற இடங்களை அடையாளங் கண்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 09 மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு 2026 – 2028 காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான மொத்த மதிப்பீடு 2,667.03 மில்லியன் ரூபாய்களாகும். அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 131.02 மில்லியன்கள் செலவு மதிப்பீட்டு கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, குறித்த சுற்றுலாத்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை 2026 – 2028 காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கும் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. தகவல் அறிதல் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் பணிகளை டிஜிட்டல்மயப்படுத்தும் கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிதல் உரிமை தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நிறுவப்பட்டுள்ள தகவல் அறிதல் உரிமை தொடர்பான ஆணைக்குழுவால், குறித்த ஆணைக்குழுவுக்கு சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்படுகின்ற மேன்முறையீடுகளை விசாரணை செய்தல் மற்றும் அதுதொடர்பான தீர்மானங்களை எடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு தற்போது ஆணைக்குழுவிடம் காணப்படுகின்ற தொழிநுட்ப செயற்கருவிகளின் மட்டுப்பாடுகளால் மேன்முறையீட்டு விசாரணைச் செயன்முறை உள்ளிட்ட ஒட்டுமொத்த செயன்முறையும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால், ஆணைக்குழுவின் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கில் அதன் செயற்பாடுகளை டிஜிட்டல்மயப்படுத்துவதற்கான கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதுடன், உத்தேசக் கருத்திட்டத்திற்கு உலக வங்கியின் விதப்புரையின் அடிப்படையில் 'திறந்த சமூக மன்றம்' Open Society Foundation) இனால் 200,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல்மயப்படுத்தலுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் கொள்வனவு, மென்பொருள் அபிவிருத்தி செய்தல், அத்தியாவசிய மனிதவள நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் தற்போதுள்ள பணிக்குழாமினரின் இயலளவு விருத்தி போன்ற பணிகளுக்கு இந்நன்கொடையைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. எலபாத பிரதேச செயலகக் கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
எலபாத பிரதேச செயலகப் பிரிவில் 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 129 கிராமங்கள் காணப்படுவதுடன், கிட்டத்தட்ட மொத்த சனத்தொகை 39,700 ஆகும். எலபாத பிரதேச செயலகம் தற்போது 10,869 சதுர அடிகளைக் கொண்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வருவதுடன், குறித்த இடவசதிகளின் மட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த வசதிகளால் கடமைகளை வினைத்திறனாக மேற்கொண்டு செல்வதற்கும் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் இடையூறுகள் காணப்படுகின்றன. அத்துடன், எலபாத பிரதேச செயலகக் கட்டிடத்தின் பின்னால் அமைந்துள்ள 20 அடி உயரமான மண்திட்டு சரிவடையக்கூடிய அபாயம் இருப்பதால் கட்டிடத்திற்குப் பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும், அதனை நிலையுறுதிப்படுத்துவதற்கு தடுப்பு அணை அமைத்தல் வேண்டும் எனவும் தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. அதனால், தற்போது எலபாத பிரதேச செயலகம் அமைந்துள்ள இடத்தில் காணப்படுகின்ற பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி, தற்போதுள்ள காணியின் நிலவமைப்பு ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு 25,000 சதுர அடிகளைக் கொண்ட புதிய அலுவலகக் கட்டிடத்தொகுதியும் மற்றும் 1,600 சதுர அடிகளைக் கொண்ட பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, இக்கருத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2028 ஆண்டில் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. பதுளை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களுடைய முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான திரு. சுனில் கலகம அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதுளை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. அம்பாறை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்களுடைய முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி மேலதிக ஆணையாளர் நாயகமாக தற்போது கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான திரு. அனுபம மங்கள விக்ரமாரச்சி அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுத் தொகையை திருத்தம் செய்தல்
மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது வதிவிடங்களிலிருந்து வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டிய குடும்பங்களை அடையாளங் கண்டு மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டம், பயனாளியால் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ளும் பொறிமுறைக்கமைய அமுல்படுத்தப்படுகின்றது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக உயர்ந்தபட்சம் 1.6 மில்லியன் ரூபாய்கள் அடையாளங் காணப்படுகின்ற குடும்பமொன்றுக்கு வழங்கப்படுவதுடன், இத்தொகையை வீடொன்றுக்கு 2.5 மில்லியன் ரூபாய்கள் வரை அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. மத்தியகிழக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையால் இப்பிராந்தியத்திற்கு 2026.02.28 தொடக்கம் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால், எமது நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டவர்கள் தமது வீசா காலப்பகுதி முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ளது. இவ்விசேட நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான பயணிகளுக்கு மாற்று வழிப்பயணங்களை தயார் செய்வதற்கு இயலுமை கிடைக்கும் வரைக்கும் இலங்கையில் சட்டபூர்வமாகத் தங்கியிருப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கமைய, 2026.02.28 ஆம் திகதி தொடக்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்படவிருந்த விமானப் பயணங்களை இரத்துச் செய்தமையால், எமது நாட்டிலிருந்து வெளியேறிச் செல்வதற்கு இயலாமல் போயுள்ள வெளிநாட்டவர்களுக்கு 14 நாட்கள் காலப்பகுதிக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கும், மேலும் அவ்வாறான விமான பயணங்கள் இரத்துச் செய்யப்படல் நிலவினால் அவர்களது வீசாவை நீடிப்பதற்கான காலத்தை மேலும் 14 நாட்கள் வரை கட்டணமின்றி நீடிப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் போன்ற விவசாய ஏற்றுமதிப் பயிர்களின் மீள்நடுகைக்கு உதவிகளை வழங்கல்
2025 நவம்பர் மாத நடுப்படுகுதியில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள், மரக்கறி மற்றும் பழச் செய்கைகளைத் துரிதமாக மீள்பயிரிடல் செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும், இவ்வனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் போன்ற சிறு ஏற்றுமதிப் பயிர்களின் மீள்செய்கைக்கு உதவிகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இவ் உதவிகளை ஏற்புடைய பயனாளி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் போன்ற பயிர்களின் மீள்செய்கைக்கு உதவிகளை வழங்க வேண்டிய தேவை பற்றி பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சால் திறைசேரிக்கு விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விதப்புரைகளின் அடிப்படையில், அனர்த்தத்தின் பாதிப்புக்களுக்கமைய கீழ்க்குறிப்பிட்ட வகையில் உதவிகளை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தேயிலைச் செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 500,000/- ரூபாய்கள் வரைக்கும்
• இறப்பர் செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 400,000/- ரூபாய்கள் வரைக்கும்
• தெங்கு செய்கைக்கு உயர்ந்தபட்சம் ஹெக்ரயார் ஒன்றுக்கு 750,000/- ரூபாய்கள் வரைக்கும்
12. இலங்கை சுங்கத்திற்கு ழுசயஉடந நுஒயனயவய XIIM முறைமை மற்றும் அதற்குரிய மென்பொருள் அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் மற்றும் நிறுவுவதற்கான பெறுகை
இலங்கை சுங்கத்திற்கு ழுசயஉடந நுஒயனயவய ஓஐஐஆ முறைமை மற்றும் அதற்குரிய மென்பொருள் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்குப் பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்கான பெறுகையை நடைமுறைப்படுத்துவதற்காக 2024.08.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த விலைமனுதாரர்களில் தொழிநுட்ப ரீதியான தகைமைகளைக் கொண்டுள்ள ஒரேயொரு விலைமனுதாரரான நிதி ரீதியான விலைமனு மதிப்பீட்டின் பின்னர், உயர்மட்ட பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், இப்பெறுகையை 08 ஆண்டுகளுக்கு ஆடைடநnnரைஅ ஐ.வு.நு.ளு.P (Pசiஎயவந) டுiஅவைநன இற்கு 2,197.96 மில்லியன் ரூபாய்களுக்கு (வரியில்லாமல்) தொகைக்கு வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை (ஊழஅஅவைவநந ழn நுஉழழெஅiஉ ளுரசஎநடைடயnஉந) நிறுவுதல்
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவுகின்ற போர் நிலைமையால் பொருளாதாரத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவாறு உலகளாவிய ரீதியில் உறுதிப்பாடற்ற சூழல் உருவாகியுள்ளது. மிகவும் சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை வலுசக்தி இறக்குமதி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கிடைக்கின்ற பண அனுப்பல்கள் மற்றும் அப்பிராந்தியத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளில் தங்கியிருப்பதால், வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இந்நிலைமையில் இலங்கை பொருளதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், பல்வேறு துறைகளில் ஏற்படக்கூடிய இடர்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நிலைமையைத் தொடர்ந்து மீளாய்வு செய்து, அதற்கமைய மேற்கொள்ள வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக கௌரவ நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பர்னாந்து அவர்களுடைய தலைமையிலும் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கூடிய பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


