436 உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ அதிகாரிகளுக்கான நியமனங்கள்

436 உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ அதிகாரிகளுக்கான நியமனங்கள்
  • :
உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவப் பணி நியமனங்களுக்கு விண்ணப்பித்த 436 புதிய மருத்துவ அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் மற்றும் அவர்கள் பணிபுரிவதற்கான இடங்களை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நேற்று (08) அறிவித்தது.

 புதிய மருத்துவ அதிகாரிகள், 2026.04.09 முதல் 2026.04.11 வரை, நாடு முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச மருத்துவமனைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணிக்குச் செல்ல வேண்டும் என்று அமைச்சு அவர்களுக்குத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, இந்தப் புதிய மருத்துவ அதிகாரிகளை, அவர்கள் நியமனங்களுக்கு விண்ணப்பித்த விதம் மற்றும் அவர்களின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில், வெளிப்படையான மற்றும் அறிவியல் பூர்வமான முறையில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Related Articles