2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை தபால்/ உப தபால் அலுவலகங்களினூடாக பெப்ரவரி மாதம் 20 ஆம் திதியிலிருந்து செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு அறிவித்துள்ளது.
அஸ்வசும உதவித் தொகை பெரும் குடும்பங்களில் உள்ள 70 வயதைப் பூர்த்தியடைந்த முதியோர்களுக்கு 2024 நவம்பர் மாதத்திலிருந்து நலன்புரி நன்மைகள் சபையினூடாக, நேரடியாக வங்கி வைப்புச் சீட்டு முறையினூடாக அஸ்வசும கணக்கிற்கு குறித்த கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது.
இதன் அடிப்படையில் அஸ்வசும குடும்பத்திற்குள் உள்ளடக்கப்பட்ட முதியோர்கள் தவிர்ந்த இதுவரை காலமாக கொடுப்பனவு பெற்றுக்கொண்டிருந்த முதியோர்களுக்கு மாத்திரம் தபால்/ உப தபால் அலுவலகங்களினூடாக கொடுப்பனவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இருந்தும் பல்வேறு பரத்தியேக பிரச்சனைகளின் காரணமாக கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட தினத்திற்குள் கொடுப்பனவு செலுத்த முடியாமையின் காரணமாக முதியோர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டமையினால், இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான கொடுப்பனவு மற்றும் நிலுவையை தபால்/ உப தபால் அலுவலகங்களினூடாக பெப்ரவரி மாதம் 20 ஆம் திதியிலிருந்து செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.