சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது
  • :

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி முத்தலம்பிட்டி கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு நந்திக்கடல் குள பகுதியில் 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்து மற்றும் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேர் கொண்ட நான்கு (04) மீன்பிடி படகுகள் மற்றும் இருநூற்று ஐம்பது (250) சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைது செய்யப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்க கடற்படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2025 பெப்ரவரி 03 அன்று, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் புவனக நிறுவனத்தால், கிளிநொச்சி முத்தலம்பிட்டி கடற்பகுதியில், சட்டவிரோதமாக இரவு வேளையில் கடல் அட்டைகளை பிடித்து கொண்டிருந்த நான்கு (04) பேருடன் 01 டிங்கி படகு மற்றும் (79) எழுபத்தொன்பது கடல் அட்டைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

மேலும், கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பலான கோட்டாபய நிறுவனத்தால் 2025 பெப்ரவரி 09, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு நந்திக்கடல் குளத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமான முறையில் மீன் பிடித்து கொண்டிருந்த (01) மீனவருடன், இருநூற்று ஏழு (207) சட்டவிரோத பொறி வலைகள், நாற்பத்து மூன்று (43) சட்டவிரோத டெமல் வலைகள், (03) நயலோன் வலைகள் மற்றும் சிறிய (03) மூன்று மீன்பிடி படகுகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் வட்டுவாகல் பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர்களுடனான மீன்பிடி கப்பல்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு கடற்றொழில் பரிசோதனை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]