78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி
  • :

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ் பெருமைமிகு தருணத்தில், சகல இலங்கையருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைச் சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சியுடனாகும்.

இத்தருணத்தில், இலங்கையர்களாக நாம் ஒரு நாடாக பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம். உண்மையான சுதந்திரம் என்பது வெறுமனே ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்லாமல், பொருளாதார ரீதியாக வலுவடைதல் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுவதுமாகும். இன்று நாம் கொண்டாடும் சுதந்திரமானது, வெறும் கடந்த கால வெற்றியாக மாத்திரமன்றி, நாளைய தினத்தில் எங்களால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகவும் அமைகின்றது. இவ்வருட தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டமானது "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறுவது தேசத்தின் அவ் தற்போதைய தேவையை முறையாக அறிந்து கொண்டாகும். கடந்த காலங்களில் நாம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தளராது, பலமானதொரு பொருளாதாரத்தையும், ஸ்திரமானதொரு தேசத்தையும் கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தீர்க்கமான சந்தர்ப்பம் உதயமாகியுள்ளது.

 

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதன்மையான அடிப்படையாவது, மக்கள் நேயமிக்க, வினைத்திறனான மற்றும் ஒழுக்கமான அரச சேவை ஒன்றென நான் பலமாக நம்புகின்றேன். அரசியல், மத, கலாசார அல்லது இன வேறுபாடுகள் இன்றி, "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" எனும் பொது நோக்கத்திற்காக ஒன்றிணைந்து, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையை விரைவுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் அதேபோன்று நாட்டுப்பற்றுள்ள பொதுமக்களினதும் முதன்மைக் கடமையாகும்.

 

"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்பதை வெறும் வாசகத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தாது, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்கும், வெளிப்படைத்தன்மையுடனான அரசாங்க நிர்வாக முறைமையொன்றை ஸ்தாபிப்பதற்கும், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் மேலோங்கிய ஒரு தேசத்தை உருவாக்குவதற்கும், நாம் அனைவரும் இன்று புதிய உறுதிமொழியுடன் கைகோர்த்தல் வேண்டும். எமது தாய்நாட்டை உலகின் முன்னால் மிளிரும் இறையாண்மையுள்ள தேசமாக உயர்த்த முடிவது, அவ்வாறான எமது கூட்டு பலத்தினால் தேசத்தைக் கட்டியெழுப்புவதினால் மாத்திரமேயாகும்.

 

சுதந்திர தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், எதிர்கால சந்ததியினருக்காக பெருமைமிக்க இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இன்றைய தினம் முன்னின்று செயற்படுவோம். அதற்காக நாம் அனைத்து பன்முகத்தன்மைகளையும் கௌரவமாகக் கொண்டு, இலங்கையர்களாக ஒன்றிணைந்து எழுவோம்.

 

உங்கள் அனைவருக்கும் பெருமிதம்மிக்க 78 ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள்!

 

பேராசிரியர் சந்தன அபயரத்ன

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்,

இலங்கை சனநாயக சோச⁶லிசக் குடியரசு

Related Articles