அக்குரேகொட பகுதியில் நடந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொருவரும் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு.

அக்குரேகொட பகுதியில் நடந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொருவரும் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு.
  • :
2026.02.13 ஆம் திகதி, தலங்கம பொலிஸ் பிரிவின் அக்குரேகொட பகுதியில் காரில் இருந்த ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை, இன்னொரு காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் 2026.02.21 ஆம் திகதி அம்பலங்கொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

 இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் இன்று (2026.02.24) ஊவா மாகாணத்தில் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது

மேலும் இது குறித்த விரிவான அறிக்கை பின்னர் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles