அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் - தேசிய திட்டம் நாளை ஆரம்பம்

அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் - தேசிய திட்டம் நாளை ஆரம்பம்
  • :

அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாப் பயணம் எனும் கருப்பொருளில் அழகான கடற்கரையை நிர்மாணிப்பதற்கான தேசிய திட்டம் நாளை (09) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில்,  மட்டக்குளி காக்கைதீவு கடற்கரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் எச். எம். கே. ஜி. பி. குணரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கான ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேலதிக செயலாளர் இதனை குறிப்பிட்டார்.

அழகான கடற்கரை ஒன்று கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்  எனும் கருப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதான நிகழ்ச்சியாக இத்திட்டத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். 

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் கடல் பிராந்தியம்,  மனிதர்களின் பல்வேறு செயற்பாடுகளினால் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், பிளாஸ்டிக் மற்றும் உட்காத பல்வேறு கழிவுகள் கடல் பிராந்தியத்தினுள் நுழைந்துள்ளன. கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்வது அத்தியாவசியமானது என்பதை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 

தொடர்த்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிரேஷ்ட மற்றும் மேலதிக செயலாளர்;

இது இலங்கையை சுற்றியுள்ள 1,740 கிலோமீட்டர் கடற்கரையோரத்தை சுத்தம் செய்யும் திட்டம். இலங்கையை சுற்றி கடல் வலயம் காணப்படும் 14 மாவட்டங்கள் உள்ளன. இந்தப் 14 மாவட்டங்களிலும் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு நாளை (09) காலை 8.00 மணிக்கு பிரதமர் தலைமையில் இடம்பெறும். அதுபோல் காலி, மாத்தறை ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும் நிகழ்வுகள் நடைபெறும். பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பிரதேச மக்கள் உட்பட சகலரும் இணைந்து இந்நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. 


இந்நிகழ்வின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 16ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.  அதன் பின்னர் பெப்ரவரி 23ஆம் திகதி வடக்கு மற்றும் புத்தளம் மாவட்டங்களை உட்படுத்தியதாக இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]