அனுராதபுரம் தெற்கு பல்துறை போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன

அனுராதபுரம் தெற்கு பல்துறை போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன
  • :
அனுராதபுரம் தெற்கு பல்துறை போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன
அனுராதபுரம் நகரை மையமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படும் தெற்கு பல்துறை போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகள் வேகமாக நிறைவடைந்து வருகின்றன.
நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இதன் நிர்மாணப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
 
இதற்கான மதிப்பீட்டுச் செலவு 2144 மில்லியன் ரூபாவாகும்.
அனுராதபுரம் நகருக்கு வரும் மற்றும் நகரின் ஊடாகச் செல்லும் பேருந்து பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மாத்திரம் பயன்படுத்தப்படும் 'Touch & Go' மற்றும் பிரதான பேருந்து நிலையம் என இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. அத்துடன், அனுராதபுரம் புதிய நகர் ரயில் நிலையமும் இந்தப் பல்துறை போக்குவரத்து மத்திய நிலையத்துடன் இணைக்கப்படும்.
ரயில் நிலையம் பாதுகாப்பான மேம்பாலம் மூலம் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படும். ரயில் நிலையத்தின் மேல் தளத்தில் பயணிகள் ஓய்வெடுப்பதற்கும் தங்குவதற்குமான சில அறைகள் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு வாடகை கார் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் வழங்கப்படும். பேருந்து நிலையத்தின் மேல் தளத்தில் வணிக நடவடிக்கைகளுக்கான இரண்டு வளாகங்கள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை ஆகியன அமையவுள்ளன.

Related Articles