முதலாம் ஆண்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய மேல் மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு

முதலாம் ஆண்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய மேல் மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு
  • :

ஜனாதிபதி நிதியம் பரவலாக்கல்

முதலாம் ஆண்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய மேல் மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு


ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கும் திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் அதிகூடிய செயல்திறனை வெளிப்படுத்திய மேல் மாகாண பிரதேச செயலகங்களை பாராட்டும் விசேட நிகழ்வு 2026 ஜூன் 6 ஆம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது.

நாடாளுமன்ற சபாநாயகரும், ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர்கள் சபையின் உறுப்பினருமான ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் விரைவான சேவையை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த பரவலாக்கல் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்து விருது பெற்ற பிரதேச செயலகங்கள் மாவட்ட ரீதியாக பின்வருமாறு.

கொழும்பு மாவட்டம்
1. ஹோமாகம பிரதேச செயலகம்
2. கடுவெல பிரதேச செயலகம்
3. கெஸ்பேவ பிரதேச செயலகம்

கம்பஹா மாவட்டம்
1. கம்பஹா பிரதேச செயலகம்
2. பியகம பிரதேச செயலகம்
3. மஹர பிரதேச செயலகம்

களுத்துறை மாவட்டம்
1. பாணந்துறை பிரதேச செயலகம்
2. பேருவளை பிரதேச செயலகம்
3. பண்டாரகம பிரதேச செயலகம்

இந்நிகழ்வில் ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர்கள் சபை உறுப்பினர்களான எஸ். சி. மாயாதுன்ன, தகைசார் பேராசிரியர் ஜே. ஜயகொடி, பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷான் கமகே, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே, களுத்துறை மாவட்ட செயலாளர் எச்.

எம். எஸ். பி. ஹேரத், கம்பஹா மேலதிக மாவட்ட செயலாளர் ஜே. டபிள்யூ. எஸ். கித்சிறி ஆகியோருடன் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், விடயப்பொறுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மட்ட சேவை வழங்கும் உத்தியோகத்தர்கள் என பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles