சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ, வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காம கிரிவெஹெர ராஜமகா விகாரையின் தலைமை பொறுப்பாளரும், ருஹுனு மாகம்பட்டுவவின் பிரதம சங்கநாயக்கருமான வணக்கத்துக்குரிய கோபவக்க தம்மிந்த நாயக்க தேரரை, நலம் விசாரித்து ஆசி பெறுவதற்காக கதிர்காம கிரிவெஹெர ராஜமகா விகாரையில் சந்தித்தார்.
இங்கு நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் குறித்தும், நாட்டின் சுகாதாரத் துறையில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் தேரருடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
நாயக்க தேரர் அமைச்சரையும் குழுவினரையும் ஆசி வழங்கி அறிவுரைகளை வழங்கினார்.
நாட்டின் மற்றும் மக்களின் செழிப்புக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் சங்கத்தின் சமூகப் பொறுப்பைக் கருத்தில் கொண்டு, வணக்கத்திற்குரிய தேரர் வழங்கிய அறிவுரையானது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்கு ஒரு பெரும் பலமாக அமைந்துள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நன்றியுடன் தெரிவித்தார்.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, கதிர்காம பிரதேச சபையின் தலைவர் எச். என். டி. ஹெரத் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


