சுற்றுலா வலயங்களில் சூழல்நேய மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்

சுற்றுலா வலயங்களில் சூழல்நேய மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்
  • :
 
சுற்றுலா வலயங்களில் சூழல்நேய மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிப்பதற்கும், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

 பல்வேறு முதலீடுகள் மற்றும் நடைமுறை வேலைத்திட்டங்களைப் பயன்படுத்தி, இந்த விசேட சுற்றுலா வலயங்களை எதிர்காலத்தில் "பூச்சிய உமிழ்வு" (Zero Emission) வலயங்களாக மாற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதற்கான பின்னணி மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சூழல்நேய அணுகுமுறையின் ஊடாக இலங்கையின் பசுமைச் சுற்றுலாத் துறைக்கு புதிய புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles