பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழையும் வீதி நீரில் மூழ்கும் பிரச்சினை தொடர்பாக
அண்மையில் (28) பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, அதற்காக நியமிக்கப்பட்ட தொழிற்படையின் தலைமையில் நேற்று (04) அப்பிரதேசத்திற்கான கால்வாயை சுத்தம் செய்து அவற்றின் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகள் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டன.
இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளைச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. மேலும், கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், அவற்றின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் மழைநீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.


