கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பான எச்சரிக்கை
இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால், 2026 ஜூன் 08ஆம் திகதி முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் 2026 ஜூன் 07ஆம் திகதி முற்பகல் 06.30 மணியில் வெளியிடப்பட்டது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு:
நடவடிக்கை எடுக்கவும்!
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள்.
திருகோணமலையிலிருந்து ஊடாக காங்கேசந்துறை கரையோரத்திற்கு முல்லைத்தீவு வரையான அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.02.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இக் கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறீர்கள்.


