அண்மையில் ஏற்பட்ட திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கேகாலை பிரதேச செயலகப் பிரிவில் ஆபத்தான வீடுகளுக்காக வாடகை கொடுப்பனவு வழங்கும் திட்டம் நேற்று (07) கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாகரிக்கா அதாவுட, கேகாலை பிரதேச சபையின் தலைவர் சரத் ரணசங்க உட்பட கேகாலை பிரதேச செயலாளர் எம் எம் பி பிரியங்கனி பெதன்கொட ஆகியோரின் பங்கு பெற்றலில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்காக 25,000/= ரூபா வீதம் 60 மாதங்களுக்காக இந்தக் கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் போது அனர்த்த பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு குறித்து கொடுப்பனவுகள் கையளிக்கப்பட்டன


