அரச சிறுவர் ஓவிய விழா- 2026

அரச சிறுவர் ஓவிய விழா-  2026
  • :

இலங்கைச் சிறுவர்களின் ஓவிய ஆக்கத்திறனை மேம்படுத்துவதையும் மதிப்பீடு செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, இவ்வருடமும் அரச சிறுவர் ஓவிய விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விழா நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. ஒரு சிறுவர் ஓவிய கலைஞராவதற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொடுப்பதிலும், அதற்கேற்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனை வளர்ப்பதிலும் இந்த அரச சிறுவர் ஓவிய விழா கவனம் செலுத்துகிறது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச கட்புலக்கலை குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் '2026 - அரச சிறுவர் ஓவிய விழா'விற்கான ஆக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள், 2026 ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய கலா பவனத்தில் (National Art Gallery) நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:- செயலாளர், அரச கட்புலக்கலை குழு: 0112882551 / 0112872031
அல்லது நாட்டின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் மூலமாகவும், www.culturaldept.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்றும் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Direct Download Link - https://www.culturaldept.gov.lk/index.php?option=com_content&view=article&id=273:2026-10&catid=13&lang=ta&Itemid=248

Related Articles