கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் பணிகளை மிகவும் வினைத்திறனாக மேற்கொண்டு அரசு சேவையில் வினைத்திறனுக்கான பொறுப்பு மற்றும் பெறுபேற்றை அடைந்து கொள்ளும் நோக்கில் 2026 ஆம் ஆண்டுக்காக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் கீழ் செயல்படும் சகல நிறுவனங்களினதும் செயல்திறன் ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் நிகழ்வு சமீபத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சில் அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தரவின் தலைமையில் நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் வழிகாட்டலில் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனம், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் 28 தலைவர்கள், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், 9 மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தரவுடன் இவ்வாறு வினைத்திறன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டது.


