சமயப் பாடங்களை கற்பதற்காகக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 மார்ச் மாதம் கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை ஒதுக்கி வைக்க வேண்டி ஏற்படுவதனால் சமயப் பாடங்களில் (தர்மாச்சார்ய) சித்தியடைந்த இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2019 மே 25 ஆம் திகதி அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு இணங்க இவ்வாட்சேர்ப்புத் தொடர்பாக அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு 2024 செப்டம்பர் 25 ஆம் திகதி ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தெளிவுபடுத்தினார்.