எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படுவதற்கு நாம் இடமளிப்பதும் இல்லை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக வரிசைகள் ஏற்பட்டுள்ளன. இந்த வரிசைகள் ஏற்படுவதற்கு காரணமான விநியோகத்தர்கள் யார் என சரியாக அடையாளம் காண முடியவில்லை. சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் தான் எரிபொருள் இல்லை என்பது. ஒருவகை நபர், சங்கம் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தி நாம் எரிபொருள் விநியோகிப்பது இல்லை இதிலிருந்து தாங்கள் விலகிக் கொள்வதாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் விநியோகிக்கிறார்கள். அப்படி என்றால் அதன் பொறுப்பை யாரும் எடுப்பதில்லை. சமூக ஊடகங்களுக்கு பரப்பியது ஏன் என்பது. எனவே வேண்டுமென்றே இடையூறு செய்வதற்காகவே இந்தத் திட்டம் என்பது நன்றாக தெளிவாகிறது. பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விநியோகத்தர்களும் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். எந்த விதத்திலும் அவர்கள் உத்தியோகபூர்வமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அல்லது அரச நிறுவனம் ஒன்றுக்கு அவர்கள் இந்த விநியோகத்திலிருந்து நீங்கிக் கொள்வதாக அறிவிக்கவில்லை. எனவே இந்த பொறுப்பற்ற பண்பை சமூக ஊடகங்களுக்கு ஊடாக அறிவிக்கிறார்கள்.
அவர்கள் அவ்வாறு விநியோகிக்காவிட்டால் ஏன் முன்கூட்டி மேலும் பதிவு செய்திருக்கிறார்கள்? அவர்கள் மேலும் நேற்று இன்று என பதிவை ஒதுக்கீடு மேற்கொண்டு இருக்கிறார்கள். அதற்கான தரவுகள் எம்மிடம் இருக்கின்றன. வழமையை விட தற்போது அதிக அளவில் முன்கூட்டிய பதிவை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
நாடு முழுவதுக்குமான எரிபொருள் விநியோகம் தொடர்பாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவுகளின் படி சிபிசி நிறுவன முன்பதிவு 1696, ஐ ஓ சி 471, சீனோபெக் 391, ஆர் எம் பார்க் 361 என முன்பதிவுகள் 2924 மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிபிசியில் 1300 அல்லது 1400 முன்பதிவுகள் கிடைக்கும் ஆனால் இப்போது 1600 கிடைத்துள்ளது இதனால் சிறு சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று ஆனால் இதற்குப் பின்னால் உள்ளதையும் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர்; அதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் இதுதான் விலையை தீர்மானிக்கும் போது கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை விசேடமாக ஏற்பட்ட நிலையின் அடிப்படையில் எரிபொருள் விலை சுட்டெண் ஒன்று பயன்படுத்தப்பட்டு, விலை தீர்மானிக்கப்படும். இதில் ஏற்படும் செலவிற்கு இலாபம் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு 3% வீத இலாப எல்லை ஒன்று காணப்படுகிறது. அது ஏற்படும் செலவுக்கே சேர்க்கப்பட வேண்டும் ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இக்கணக்கு முறை கடந்த காலத்தில் இருந்து வந்துள்ளது. எரிபொருள் இறக்குமதி செலவு மற்றும் எரிபொருள் போக்குவரத்துச் செலவு என்பவற்றிற்கு மூன்று வீத இலாபம் சேர்க்கப்படுவதற்கு பதிலாக வரிக்கும் சேர்த்து இந்த மூன்று வீதம் கணிக்கப்படுகின்றது.
விசேடமாக கடந்த கால கட ன்களை திருப்பச் செலுத்துவதற்கு வரி சேர்க்கப்பட்டுள்ளது ஏதோ ஒன்றினால் வரிக்கும் மூன்று வீதம் இலாபம் சேர்க்கப்படுகின்றது. அதற்குப் பதிலாக மேலதிகமாக நான்கு அல்லது ஐந்து ரூபாய் ஒரு லீட்டருக்கு செலவாகின்றது. இதனை முடிந்தவரை நாம் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய மூன்று வீதத்தினால் கிடைக்கச் செய்துள்ளோம். இந்தக் கதை அதிகமாக உள்ளது இதற்கு நீதிமன்றமும் சென்றுள்ளார்கள் இதற்கு நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டது 2024 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தடை உத்தரவு நீக்கப்படும் என ஆனால் சிபிசி கூறி இருக்க வேண்டும் இது தமக்கு நியாயமற்ற நிலையில் காணப்படுவதாக எமக்கு அறிவிக்காது, நேற்று 28 ஆண்டுகளில் வழக்கு விசாரணையின் போது அவர்கள் இது தமக்கு நியாயமற்றது என தெரிவித்தார்கள்.
மூன்று நான்கு ஐந்து ஆகிய இலக்க தீர்ப்புகளில் எரிபொருள் விநியோகத்தின் இலாபத்தை விட பொதுமக்களின் அழுத்தம் தான் முன்னுரிமை பெற்றுள்ளது. வரிக்குப் பெற்ற இலாபம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநியாயம். இது மக்களின் படம் இந்த நிலையில் செல்ல முடியாது இதனை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கு பதில் வழங்கப்படவில்லை. இதில் முக்கியமானது அறிவித்தலுக்கு பதில் வழங்காமல், நீதிமன்றத்தில் இவ்வாறு தமக்கு அநியாயம் ஏற்பட்டதாக அறிவித்தது.
இவ்வாறு பதிலளிக்காது சமூக ஊடகங்களுக்கு ஊடாக இதனை திரிபுபடுத்துவதனால் இது பொறுப்பெற்ற செயல். இதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உத்தியோகபூர்வமாக எதுவும் பரிமாறப்படவில்லை.
பொது மக்களுக்கு இதில் பொறுப்பு உள்ளது இதனை தேடிப்பார்த்து தகவல் வெளியிட வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு உரியது. அத்துடன் மீண்டும் தான் வலியுறுத்துவதாக குறிப்பிட்ட அமைச்சர்; நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடு இல்லை முன்பை விட அதிகமாக முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வலியுறுத்தினார்.
அத்துடன் மாலையாகும் போது ஒதுக்கீட்டில் மாற்றமடைந்தால் அதனை அவதானித்து செயல்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.