ஒக்டோபர் 3 ஆம் திகதி வரும் உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும்.
அதன்படி, 2025. 10. 02 ஆம் திகதி வழமையாக மூடப்படும் நேரத்திலிருந்து 2025. 10. 04 ஆம் திகதி வழமையாக திறக்கும் நேரம் வரை மதுபானக் கடைகள்அனைத்தும் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.
- இலங்கை மதுவரித் திணைக்களம்


