தூரப் பயண சேவை பஸ்கள் தேநீர் இடைவேளைக்காக நிறுத்தும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு, குடிபானம், குடிநீர் போத்தல்கள் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின் நுகர்வோர் அதிகார சபையின் “1977” என்ற குறுஞ்செய்தி சேவைக்கு தெரியப்படுத்துமாறு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெந்தழுவ, பறகடுவ பிரதேசங்களில் தூர சேவை பஸ் வண்டிகள் தேநீர் இடைவேளைக்காக நிறுத்தும் சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு உணவு மற்றும் குடிபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு இணங்க, இரத்தினபுரி மாவட்டத்தின் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் சுற்றிவளைப்பில் மேற்கொண்டு உணவக உரிமையாளர்களை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததன் பின்னர் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


