இலங்கை கடற்படையினர், 2025 மே மாதம் 02 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 310 கிலோகிராம் 44 கிராம் பீடி இலைகள் மற்றும் சுமார் 12,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களை கைப்பற்றினர்.
அதன்படி, இலங்கை கடற்படைக் கப்பல்களான தம்மென்னா மற்றும் வசப ஆகிய நிறுவனங்கள் 2025 மே 2 அன்று ஊருமலை மற்றும் கச்சத்தீவு கடலோரப் பகுதிகளிலும், 2025 மே 05 அன்று காஞ்சதேவ நிறுவனத்தினால் வெண்புரவிநகர் கடலோரப் பகுதியிலும் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகளினால், மேற்படி கடலோரப் பகுதிகளில் கடற்படையினரின் நடவடிக்கைகளால் கரைக்கு கொண்டு வர முடியாததால் கைவிடப்பட்டதாக சந்தேகப்படும், கரையொதிங்கிய சுமார் 310 கிலோ 44 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இலங்கை கடற்படை ஷில்ப நிறுவனம், கடுகன்னாவ மற்றும் வத்தேகம காவல் நிலையங்களுடன் இணைந்து, 2025 மே 02 மற்றும் 09 ஆகிய திகதிகளில் கண்டியின் முருத்தலாவ மற்றும் லேவெல்ல பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் மூலம், சட்டவிரோத விற்பனைக்காகத் தயார்நிலையில் இருந்த சுமார் 12,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களை கைப்பற்றினர்.
மேலும், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடுகன்னாவ மற்றும் வத்தேகம காவல் நிலையங்களில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.