இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என். மதியழகன் எழுதிய " சொல்லும் செய்திகள்" மற்றும்" தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு " என்ற தலைப்பிலான இரண்டு நூல்கள் மே மாதம்19 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த இரண்டு நூல்களையும் திரு. வி.என். மதியழகனின் சகோதரி ஆனந்த லட்சுமி தர்மசீலன் பிரதமரிடம் வழங்கிவைத்தார். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத் துறை மாணவர்களால் தற்போது ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் இந்தப் நூல்களை, பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் 1,000 பாடசாலை நூலகங்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக திரு. மதியழகனின் சகோதரி கூறினார்.
இந்த நிகழ்வில் வி.என். ஆனந்த லட்சுமியின் மகன் ஆதித்யன் மற்றும் அவரது மகள் திரினேத்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.