இன்று (19) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாடு பூராகவும் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில், டெங்கு நேயால் பாதிப்புக்குள்ளான 95 பிரதேசங்களை ஆய்வு செய்து, அங்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் என்பனவும் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, வீடுகளுக்கு வருகை தரும் சகாதார ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.