16 வது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரை பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைவாக பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போக்குவரத்துத் திட்டத்திற்கமைவாக, பாதை மூடப்பட மாட்டாது என்பதுடன், போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல் ஒன்று ஏற்படுமிடத்து, பொல்துவ சந்தியில் இருந்து ஜயன்திபுர ஊடாக கியன்யேம சந்தி வரையான பாராளுமன்ற வீதிக்கு, கொழும்பிலிருந்து வெளியேறும் மற்றும் கொழும்பிற்கு உள்நுழையும் வாகனப் போக்குவரத்துகள் கட்டுப்படுத்தப்படும்.
மாற்று வழிகள்..
- கொழும்பிலிருந்து புறப்படும் வாகங்கள், பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை சந்திக்குச் சென்று, பின்னர், மூன்று பாலம் சந்தியிலிருந்து (பாலம் துன ஹந்திய) கியன்யேம சந்தி வரை பயணிக்கலாம்.
- கொழும்புக்கு நுழையும் வாகனங்கள், கியன்யேம சந்தியிலிருந்து, மூன்று பாலம் சந்தியூடாக (பாலம் துன ஹந்திய) பத்தரமுல்லை சந்தி வரை பயணித்து, பின்னர், பொல்துவ சந்தியூடாக கொழும்பு வரை பயணிக்கலாம்.