சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்

சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்
  • :

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்திய அரசு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுடன் நடத்திய நேரடி கலந்துரையாடலின் விளைவாக, சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, இன்று (24) மாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கெசல்வத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபர் கெசல்வத்தையைச் (வாழைத்தோடம்) சேர்ந்த 34 வயதுடையவர்.

சந்தேக நபருக்கு எதிராக கீழுள்ள குற்ற்ச்சாட்டுக்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு கெசல்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்தல்.

2018 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்கு உதவி செய்தல்.

2021 ஆம் ஆண்டு மட்டக்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கி கொலை செய்தல்.

2021 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைக்குண்டு வைத்திருந்தல் தொடர்பாக.

கெசல்வத்த, வெல்லவீதிய மற்றும் புளூமெந்தல்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தல்.

சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles