Clean Srilanka வேலைத்திட்டத்துடன் இணைந்து பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் வேகமாக பரவிவரும் நீர்வாழ் தாவரங்களை அகற்றும் சிரமதான நிகழ்வொன்று இன்று (02) பொலன்னறுவையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சரும், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டி.பி. சரத் உட்பட பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ரத்னசிறி, பத்மசிறி பண்டார, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.