சொந்தமாக இருக்க இடம் - அழகான வாழ்க்கை": மட்டக்களப்பு மக்களுக்கான வீட்டுரிமை உறுதிப்படுத்தல்!

சொந்தமாக இருக்க இடம் - அழகான வாழ்க்கை": மட்டக்களப்பு மக்களுக்கான வீட்டுரிமை உறுதிப்படுத்தல்!
  • :
முறையான வீட்டுரிமை அற்ற எமது நாட்டு குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அழகான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது அரசாங்கத்தின் முதன்மைப் பணியாகும். அதற்கமைய, "சொந்தமாக இருக்க இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (25) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.

 வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான "சொந்தமாக இருக்க இடம் - அழகான வாழ்க்கை " என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள 106 பயனாளிகளுக்கு 106 மில்லியன் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இன்றைய தினம் 15.9 மில்லியன் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

Related Articles